Saturday, October 28, 2023

வானவில்லே ஒரு கவிதை கேளு- முழுக் கதை

 

வானவில்லே ஒரு கவிதை கேளு

--------------------------------------------------------

 

முதலாவது நிறம் ஊதா.

 

     ஊதா!  சாதா வண்ணங்களை விட ஊதாதான் நேஸத்திற்கு தோதானது. ஊதா காதல் வண்ணம். ஊதாப்பூ அரம்பையரின் நாதாப்பூ  . ~ஊதும் வண்டு ஊதாப் பூ | என்று வியந்தான் வைரமுத்துக் கவிஞன். ~ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டுகிறது..| என்று குறும்பு சொன்னான் இன்னொரு நாதாப் புலவன். ஊதாப் பூச் சூடிய மாதா இராமனின் சீதா.                 திராட்சைää ப்ளம்ஸ்ää நாவற்பழம்ää ஊதாப் பெர்ரிஸ்  ஸ்ட்ராபெர்ரிஸ் போன்றன ஊதாவுக்குரிய பழங்கள். ஊதாப் பழச் சாறுகளில் உள்ள ‘’ப்ளோவனைட்ஸ்|’’ உயிர்ச்சத்து புற்று நோயைக் கூடச் சற்றுக் குறைக்கும்.

 

                    ஊதா மலர்கள் ஆற்றங்கரையில் அடர்ந்திருந்ததால் அந்த ஊருக்கும் ~ஊதாப்பத்து| என்று பெயர்.  ஊதாப் பச்சையில்ää ஊத்தைப் பச்சை வேலைப்பாடு நெய்த சேலைச் சோலையில் துயின்ற ஊதாப்பத்து அதிகாலை வேளை கண்விழித்தது. மார்புக் கச்சை அணிந்தாற்போல் ஊரின் இருபக்கமும் ஆறு. வார்ப்புப் பசுமை வயல்வெளியில் வரம்புகளின் கூறு. இச்சை மிகுந்த பட்சிகளின் வீறு. புஷ்டியான பசுக்களின் ம்ம்ம்ம்பாhhக்கள் வேறு. இயற்கை இரைச்சல்கள் ஒரு சங்கீதமாய்க் கேட்கும் பாரு... அந்நேரம் எழுந்திருந்தாள் ஆக்கிலா..!

 அதிரடிப்படைக்கும்ää புலிப்படைக்கும் அடிப்படையிலேயே பயப்பட்டிருந்த மக்கள் விடிந்தாலும்ää என்ன நடந்தாலும் உடனேயே வெளியே தலை நீட்டுவதில்லை. ஆனால் இன்று அதற்கெல்லாம் பயப்பட்டு முடியாது. ஆக்கிலா உடன் வெளிக்கிட்டாக வேண்டும். இன்று நேர்முகப்பரீட்சை இருக்கிறது. மட்டக்களப்பில்!. சும்மா அல்ல.. சர்வதேசங்களில் கிளைகள் பரம்பிய இம்மாம் பெரிய ~ஜீ.கே| வங்கியில் பிராந்தியங்களின் உதவி முகாமைத்துவ பதவி. ஆக்கிலா...?

ஆக்கிலா BSc..

 தக்க வேலை கிட்டாத பட்டதாரி.. வீட்டில் சட்டைதாரி.. சித்திரை பதினாறு வந்தால் வயது இருபத்து ஆறு. நித்திரை  உதறி எழுந்தாள் இன்று. எத்திரைக்குள் மறைத்தாலும் அத்திரை கிழித்து ஒளி வீசும்ää பர்தாவுக்குள் பத்திரமாய்ப் பாதுகாத்திருந்த சித்திரை மாத நிலாமுகம்.. காத்திரமான உடல்வாகு. நேத்திரங்களின் கீழே இரு பாத்திரங்களில் விழிகள் சீனிப்பாகு..

நேர்முகப்பரிட்சயமில்லாதோர்ää நேர்முகம் பார்த்து நேர் கண்டு பரீட்சிப்பர். எத்தனையோ நேர்முகப் பரீட்சைகள்.. அத்தனையும் வேர் ஊண்றாத அநிச்சயங்கள். நேர்முகம் காண தன் கூர்முகம் கழுவிக் குளித்தாள். கார் குழல் சீவி முடித்தாள். உள்ளதற்குள் நல்லதாய் ஓர் உடை தேர்ந்தாள். தயாரானாள்.

பட்டம் பெற்றது முதலுக்கே நட்டம் எனத் திட்டும் உம்மா பாயில் அட்டை போல பாதி வட்டமாய்ப் படுத்திருந்தாள். எட்டிக் கடந்து வாசலுக்கு வந்தாள். திட்டம் இட்டு;ப் பட்டதாரியாக்கிய வாப்பா வயலில் மிதிகால் வெடிபட்டுக் குதிகால் இழந்ததால்ää மடிகாலில் தரையிருந்து விடிகாலை வேடிக்கையில் வாடிக்கையாயிருந்தார். சூடிக்கையாக ஆக்கிலாவை நோக்கினார்

~கவனம்..மகள்..கவனம்..| அவணக் கணக்கில் கவலைப்பட்டு விடை தந்தார். புவனம் நன்றாய் வெளிக்கத் தொடங்கியது. கிட்டுமா  இந்த வேலையாவது..? எட்டுமா வங்கிச் சம்-பழம்.... உம்மாவின் வாட்டும் நோயை ஓட்டுமா... நாட்டம் இறைவன்  என்றால் என் குரல் அவனுக்குக் கேட்குமா.....விரட்டுமா வறுமையை...? மதிக்குமா வங்கிää திறமையை...! சிறைப் பிடித்த எண்ணங்களை விரட்டி வெளிக்கிட்டிறங்கினாள் வீதியில்..

வட்டப் பாதையில் ஆக்கிலா எட்டடெடுத்து நடக்கையில் தொட்டணைந்து வந்ததொரு மட்டக்களப்பு மினி பஸ்.

~மட்டக்களப்பா.?..ஏறுங்க மிஸ்..| என்றான் பஸ் பொஸ். ~யெஸ்| என்ற ஆக்கிலா ஏறினாள்... உடன் முகம் மாறினாள்.. உள்ளிருந்தோர் பலர்  கிட்டக் கிட்ட வெளியேறிய பட்டதாரிகள்.. உடனிருக்கும் போட்டிதாரிகள்.. இவர்களை மீறி காலை வாரி விடுமா வேலை..?

~ஹெலோ..ஆக்கி! இப்படி இருங்க..குட்மோனிங்கப்பா|

என்றாள் வெகுநாளைய பரீட்சய ஆச்சரியக் குரலில் பின் சீட்டில் இருந்த ஒரு சிட்டுப் பெண். மொட்டு மார்பும் கட்டு உடலுமாய் இருந்தாள். பாவலர் பஸீல் காரியப்பர் பாடிய ~அழகான ஒரு சோடிக் கண்களின்| மேல் நெற்றிப் பொட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிவில் இட்டு இருந்தாள். ஊதாப் பட்டு நிறத்தில்  சுடிதாரும்ää ஊதாச் சிறுமலரும் சூடியிருந்தாள்.  ஆக்கிலாவுக்கு ஒருக்களித்து  இருக்கையளித்து இடம் தந்தாள்.

~ஹெலோ கமலினிச் சிட்டு..வெரிகுட் மோனிங்..|. பதில் கூறி அமர்ந்தாள் ஆக்கிலா.

~என்ன ஜீ.கே. பேங்க் இன்ற்;ரவிய10தானே....?| சிட்டுக்கமலினி பட்டென்று கேட்டாள்.

~அன்னா ஓக்கேää பேங்க் இன்ற்ரவிய10தான்..ஏன்ää?|

~மூன்று வேகன்ஸி..முப்பத்துமூன்று பேர்க்கு  இன்ற்ரவிய10|

~என்று நீசொன்னாலும் முயன்றுதான் பார்ப்பேன் இன்ற்ரவிய10|

~மூன்று பேர் தேவையென்றால் யாரென்று....?|

~மூன்றில் நானொன்று. இன்னொன்று நீயென்று நினை. துணிவே துணை|

~கட்டாயம் கிட்டுமா..|

~கிட்டாதாயின் வெட்டென  மற|

~எட்டாதாயின் பெற்ற பட்டம்?|

~விட்டு விளையாடு நட்டநடுவானில்..|

விட்டாளில்லை பொட்டுச் சிட்டுக் கமலினி. வழி நெடுக  காதுகளில் தேன் பிழிந்தாள். பழைய பல்கலைக்கழக நினைவுகளில் அழிந்தாள். ஆக்கிலாவும் அவளுடன் அமிழ்ந்தாள்..

திடீரென்று மினிபஸ் படீரென்று நின்றது. உள்ளிருந்த வானொலி ~சடீரென்று| வாய் மூடியது. பயணிகள் முகம் வாடியது.  காட்டுமாவடிச் சோதனைச் சாவடி அது.

~..றங்கிப் போங்க..றங்கிப் போங்க..| சாரதி குரலெடுத்தான்.

~பேக்குகள திறந்து காட்டுங்க..நாக்குகள பூட்டிக் கொள்ளுங்க| நடத்துநன்  விரலெடுத்தான். சனம் கும்பலாக இறங்கியது. அதிரடியினர் பம்பலாக நின்றிருந்தனர். ஆக்கிலாவும் கமலினியும் எழும்பலாயினர்

~இறங்கடி அதிரடி வரமுன்னடி..|

 ஓரடி ஈரடியாய் வைத்து இறங்கி கீழடி வைத்தாள். அடிமேலடி சீரடி வைத்து நடந்தாள். அதிரடி முகாமை அடைந்தாள்.  வரிசையில் தன்முகம் காட்டி முன்வரிசை பிடித்தாள்.

அதிரடிப்படை பெண் வீராங்கனை வீறாப்புடனும்ää வெறுப்புடனும் விறைப்புடனும் சீருடை மேல் கவச ஓருடை தரித்து நின்றாள். சீருடை மீறி மார்புடை த்து நின்றது. ஆக்கிலாவைக் கூர்மையாகப் பார்த்தாள். ஆக்கிலா வேர்த்தாள். மௌனம் கார்த்தாள்.

~ஐடென்டி...? ஐடென்டி கண்ணங்கோ...!| கேட்டாள் அதிரடி தடாலடி.

~ஐடென்டி..? ஐடென்டி இன்னாங்கோ..| கொடுத்தாள் பதிலடி தள்ளாடி..

~ஊரென்னா...?|

~ஊதாப்பத்து. ண்ணா..!|

~பேரென்னா...?|

~ஆக்கிலா..|

~போறெங்கோ..?|

~பெற்றிக்கலோ..|

~ஏனுங்கோ...?|

~வேணுங்கோ...|

மறுபடி முறைப்புடன் பார்த்த காக்கிச் சட்டைää ஆக்கிலாவின் கைச்செட்டையைப் பிடித்து சல்வார்செட்டைத் தடவினாள். கைக்குட்டையைப் பிரித்தாள். கைப்பையைக் குடைந்தாள்.

குண்டு கொண்டு போவாளென்று சந்தேகம் கொண்டு விண்டு விண்டு நண்டு போல தோண்டுகின்றாள். ஓண்டும் இல்லையெனக் கண்டு திருப்தி கொண்டு தடையைத் திறந்தாள். விடை தந்தாள். தொடைகள் வலிக்க ஆக்கிலா நாக்கெழாமல் திட்டடியபடி  மறுபடி மறுமுனையடைந்தாள். சனம் சோதனை மேல் சோதனை அனுபவித்து உலக சாதனை புரிந்து வேதனையுடன் மறுமுனை வந்து சேர்ந்தனர். வாலிபர் சிலர் மடக்கப்;பட்டனர். பயனம் முடக்கப்பட்டனர்.

வரிசையில் சிலää வரிச்சட்டை வழிசல்கள் நெரிசலை வைத்து பெண்களிடம் தம் கைவரிசை காட்டினர். பெண்கள் கண்கள் புண்கள் ஆவதை ஆக்கிலா நோக்கினாள். சிட்டுக் கமலினி வரிசை விட்டு கஷ்டப்பட்டு வந்துற்றாள். அதிரடிää பஸ்ஸேறி  வரிசைக்கு மிஸ்ஸாகி  இருந்தோரின் தஸ்தாவேஜூகளும்ää பிஸ்தாப் பொருட்களும் சோதித்து கீழிறங்க..  மறுபடி பஸ் பிறைவடி திரும்பி  இவர்களிடை வந்தது.

~ஏறுங்க..ஏறுங்க...வாருங்க..|

கூட்டம் குழம்பி ஏறியது. கட்டுப்பாட்டை மீறியது. பஸ் எழும்பிச் சீறியது. ஆறு சோதனைச் சாவடிகளிலும்ää சாவடி பட்டுää அன்னக் காவடிää அரிசிக் காவடி பட்டுää.. நடைக் காவடி எடுத்துää தாவடிச் சந்தி தாண்டி மட்டக்களப்பை ஒருவாறு எட்டிப்பிடிக்க மணி பதினொன்று.. அப்போது...?     

                     

 

 

 

இரண்டாவது நிறம் கருநீலம்.

 

இரவின் நிறம் கருநீலம். கருமையில்  நீலக் கரும் மயில்  நீலக்கருமை  விரிக்கும் பெருமை சிரிக்கும் அருமைக் கானகக் கருமையும் கருநீலம்.  கருநீலம் வானவில்லில் ஒரு நீலம். கருநீல ஆலமுண்டவனை திருநீலகண்டனெனக் கொண்டனர் இந்துக்கள். கருநிறக் கண்ணுருக் கொண்டவனைக் கருநீலக் கண்ணனெனக் கருதினர்  அவர் தம் பந்துக்கள்.

ஆழக்கடல் கருநீலம். மேலக்கடல் ஒரு நீலம். நுரை நீளும் கருமேக வானம் கருநீலக் கோலம்.  கருவிழிகள் கொண்டு கருநீலக் கல்லொளி கண்டால் கண்கெடும் ஞாலம். கறுப்பில் நீலத்தை வெறுப்பில் கலந்ததைக் கருநீலம் என்பர்.

 

 

கருநீலப் பெயர்ப்பலகையில் ~ஜீ.கே. இன்டநஷனல் பேங்க் லிமிற்றட்| என்று மும்மொழிகளிலும் பெயர்த் தலைப்பாகை கட்டிய  சர்வதேச வங்கி  மூன்று மாடிக் கருநீலக்கட்டிடத்தி;ல்  தலை நிமிர்ந்து நின்றது.

உள்ளே கேட்போர் கூடத்தில்  கிட்டக்கிட்ட வட்டமாக மட்டுப்படுத்தப்பட்ட முப்பத்துமூன்று பட்டதாரிகள் வட்டமாக கொட்டக் கொட்ட விழித்தபடி உட்கார்நதிருந்தனர். தம்முறை வருமட்டும்  அடக்கியிருந்தனர் தம் கொட்டத்தை.  அளந்து கொண்டிருந்தனர் வங்கி விட்டத்தை.

ஆக்கிலாவின் இலக்கம் பதினாறு.  மணி காட்டியது பதினொன்று பதினாறு. பதினைந்தாம் இலக்க கமலினிச் சிட்டு உள்ளே போய் நிமிடங்கள் பதினாறு. சட்டென்று கதவுகளைத் தள்ளிக் கொண்டு சிட்டுக் கமலினி விட்டு வெளியே வந்தாள். சுட்டுவிரலை ஆக்கிலாவை நோக்கி உயர்த்திக் காட்டினாள். சீருடைச் சேவகன் அழைத்தான்.

~நெக்ஸ்ற்..ஸிக்ஸ்ற்றீன்....மிஸ்.ஆக்கிலா முஹமட் முக்தார்.|?

காதில் பாய்ந்தது தேனாறு. வயிற்றில் பாலாறு.  எழுந்தாள் சிற்றாறு. நடந்தாள் ஒருவாறு. நடக்கையில்ää அறையைக் கடக்கையில்  கமலினியைப் பார்த்தாள் பலவாறு. வேலை கிடைத்தால் வரலாறு. சும்மா அல்ல களிநடமாடும்ää வெளிநாடு பின்புலத்தில் இயங்கும் ~ஜீ.கே இன்டர்நெஷனல்| வங்கிக்கான பிராந்தியங்களின் உதவி முகாமையாளர் பதவி. இருபதினாறு ஆயிரம் சம்பளம். போனஸாக மூவாயிரம் கிம்பளம். மதிப்பேறும் அம்பலம். தங்கத் தாம்பாளம்.. ஜரிகை ஜமுக்காளம்.. ஏராளம்.. கனவுலகம் தாராளம்...

உள்ளே நுழைய முன் சிறிது தாமதித்தாள்.  எல்லாவற்றையும் கவனிப்பார்கள்.. சுட்டி விரல் மடக்கினாள்.  தட்டிக் கதவைச் சொடுக்கினாள்.

                    ~மெ ஐ கம் ஈன் ஸே...?| என்றாள்.

                    ~ப்ளீஸ்.. கம் ..| உள்ளே அழைத்தது ஒரு குரல்.

ஓரு கணம் தாமதித்தாள். பின் உட்சென்றாள். உள்ளே- கருநீலத்தில் பளபள மேஜை.  கருநீல மலர்க் கொத்தில் விரிப்பு. மலர்களின் சிரிப்பு.. ஐந்து கதிரைகள். மூவர் உட்கார்ந்திருந்தனர்.  ஓருவர் பொட்டும் திருநீறும்.  மற்றவர் கருநீலக் கண்களுடன் ஐரோப்பியர்.  இன்னொருவர் மீசையில்லாத சிங்களவர். அனைவரும் கோட்டுää டை சூட்டுடையோர். கேள்வி கேட்டுடைப்போர்.  குயுக்திக் கேள்விகள் போட்டுக் குடைவோர். மதியூகப் பதில் வராவிட்டால் சீட்டுக் கிழிப்புடையோர். இனித் தொடங்குவர் கேள்விப் போர். 

ஓரத்தில் ஒரு ரோபோ மனிதன். கண்களில் கருநீல நியோன் வெளிச்சம். முகம் கணிணி மயம். அதில் 40ää320.63 என்று ஒளியெழுத்துக்கள். ஆக்கிலா ரேபோவை நோக்கினாள்.உட்காராமல் நின்றாள்.

                    ~குட்மோர்னிங் ஸேர்ஸ்|

                    ~ப்ளீஸ்..டேக் யுஅர் ஸீற்ஸ்|

                    ~தேங்க்ஸ்|

கதிரை நுனியில் அமர்ந்தாள். மையமாக நோக்கினாள். விழிகளில் ஆர்வம் தேக்கினாள். பர்தாவைச் சரியாக்கினாள்.  வங்கியின் ஆர்.ஏ.ஓ. வான  நெற்றிப் பொட்டர்  ஐரோப்பியரிடம் அறிமுகம் வாசித்தார். சிங்களவர் யோசித்தார்.

~இப்பெண் செல்வி ஆக்கிலா முஹமட் முக்தார். வயது இருபத்தியாறு. பீ..எஸ்.ஸி பி.எட்மினிஸ்ட்ரேஸன்ஸ். என்ட் எக்கவுன்டிங். ஜப்னா யூனிவேர்ஸிற்றி. உயரம் {ஐந்தடி நாலங்குலம்.  இலங்கைச் சோனகர். வங்கி முன்னனுபவமில்லை.  தற்போதைய மாத வருமானம் வெறும் எண்ணூறு ரூபாய். பொழுது போக்கு  வாசிப்பும் இணையத்தளச் சஞ்சாமும். ..இடது கை சரிவான கையெழுத்து.  விவேகம் 63 விகிதம்.  தெரிந்த மொழிகள். தமிழ்ää ஆங்கிலம்ää அரபு...

                    ~ஸிங்ஹள..? ஸிங்ஹள வெரித..?|

சிங்களவர் சிங்களத்தில் சிங்கமெனச் சீறினார்.

                    ~ஸிங்கள டிக்கக் புளுவங் இதிங்|

சிங்களவருக்கு சிங்களத்தில் சிறிது சினுங்கினாள் ஆக்கிலா. சிங்களவர் சிரிக்காமல் உள்ளுர மகிழ்ந்தார். பொட்டு அறிமுகத்தை விட்டு விட்டு ஜரோப்பியரிடம் கேட்டுக்கேட்டுச் சொன்னார்.

                    ~மிஸ்.ஆக்கிலா. உங்கள் பட்டம் எமக்கு இரண்டாம் பட்சம். நாங்கள் மூவரும் மூன்று கேள்விகள் கேட்போம். அளிக்கும் பதிலைப் பொறுத்தே தீர்மானிப்போம். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.|

ஐரோப்பியரும் சிங்களவரும்ää ஆக்கிலாவின் ~ஆளுமைத் தோற்றத்திற்கு|ப் புள்ளியிட்டு உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஓரு அரை நிமிடம் அறையிடம் மௌனம் உறைவிடம்.  சட்டென்று கேட்டார் பொட்டர்.

~மிஸ். ஆக்கிலாää இங்கே ஒரு மேசை  ஐந்து கதிரைகள். மூன்றில் நாங்கள். ஓன்றில் நீங்கள். சரி.. இன்னொன்று யாருக்காகப் போடப்பட்டுள்ளது.  ஜந்து சொற்களுக்குள் மூன்று விநாடிகளுக்குள் பதி....|

                    ~வாடிக்கையாளருக்காக.|

 ஒரே விநாடியில் ஒரே சொல்லில் பதிலிறுத்தாள். ஆக்கிலா.  பொட்டு மறுமொழியால் திடுக்கிட்டு ஜரோப்பியரிடம் மினக்கெட்டு கூறிவிட்:டு  திகைப்புற்றுச் சரணடைந்தார். ஐரோப்பியர் மெலிதான அழகான வேற்று நாட்டுக் கீற்றுப் புன்னகையுடன் ஆக்கிலாவை மேலும் சற்று உற்று நோக்கினார்.

~மிஸ். ஹாhக்கிலோவ்ää ~ஜீ.கே. இன்டர்நஷனல் பேங்க் லிமி;ட்டட்| என்ற நமது வங்கிப் பெயருக்கு எத்தனை ஆங்கில எழுத்துக்கள் தேவை.. பத்து செகண்ட் எடுத்துக் கொண்டு விடையளிக்.....|

~ஜீ.கே இனடர்நஷனல் பேங்க் லிமிட்டட் என்ற வசனத்திற்கு எந்தளவு ஆங்கில எழுத்துக்கள் தேவையோ அத்தனை எழுத்துக்கள் தேவை........|

ஒரே செக்கண்டில் விடையளித்தாள் ஆக்கிலா. குயுக்தியான விநாடிகள்தான் முக்கியம். ஐரோப்பா ~அடேயப்பா| பாணியில்  கீற்றுவாய் பிளந்தார். அவரேயறியாமல் ~எக்ஸ்ட்ராக்ட்லி| என்றார். வாய் மென்றார். ஆமென்றார்.

அடுத்து வாளேந்திய சிங்களவர். டையை இறுக்கினார். முகத்தைக் குறுக்கினார். பேப்பரில் கிறுக்கினார். ஆக்கிலாவை உறுக்கினார். திடீரென வேகமாகச் சறுக்கினாப் போல் கேட்டார்.

~மிஸ்ஃ ஆக்கிலாää ஒரு சின்னக் கணக்கு.விடை சொல்லத் தேவையில்லை. ஆனால் விடைக்கான காரணம் சொல்லல் வேண்டும். இது உங்கள் ~ஒப்ஸவேர்ஸ|னைப் பொறுத்த விடயம். ஓக்கே..  6 மாத காலத்திற்குää 22.03 வீத வட்டிக்குக் கொடுக்கப்பட்ட 63ää06ää75 ருபாய் 56 சதத்தை 3 வருடமும் 5 மாதமும் கடந்த பின் ஒரு மாதம் கிடைக்கும் தேறிய இலாபத்தை 3 வருட குத்தகையில் ஒரு கம்பனிக்கு 10 வீத வட்டிக்குக் கொடுத்தால்ää மாதாந்தம் ருபாய். 40ää320. சதம் 87 இலாபம் வரும் என்று ஒரு மனிதன் கணக்குக் காட்டினால்ää  அந்த மனிதனை நம்புவீர்களா..?

~தாராளமாக நம்புவேன்|  பட்டென்று பதிலளித்தாள் ஆக்கிலா.

                    ~எப்படி.. எப்படி  நம்புவீர்கள். முன்பின் அறியாமல்...?

                    ~கணக்குக் காட்டியது ரோபோ மனிதனாச்சே..|

சட்டெனச் சொன்ன ஆக்கிலா மூலையில் நின்று கொண்டிருந்த மினி ரோபோவைச் சுட்டிக் காட்டினாள். ரேபோவின் மார்பில்.ää 40ää320.87 சதம் காட்டி  டிஜிட்டல் நியோன் ஒளி ஒளிர்ந்து கொண்டிருந்தது.  வாளைத் தவறவிட்ட சிங்க(ள)ம்ää வியந்து போய் பதிலால் அயர்ந்து போய் அமர்ந்தது போய். உடனே ஐரோப்பியர்ää

ஓக்கேää மிஸ். ஹாக்கிலோவ்ää தேங்க் யு வெரிமாச்.|  என்றார். ஏனைய இருவரும்ää ஆமோதித்து புன்னகைத்து பின் நகைத்து தலையாட்டினர்.

                    ~தேங்க்ஸ் ஸேர்ஸ்...|

ஆக்கிலா அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. எழுந்து தலை வணங்கி வெளிவந்தாள். புதினேழாம் பட்டதாரி வாலிபன் பொட்டைக்கண்ணுடையவன்  இராமக்கிருஷ்ணன் அழைக்கப்பட்டு  உட்சென்றான்.  ஆக்கிலா  கேட்போர் கூடத்தை விட்டும் வெளியே வந்தாள். அப்போது தோளில் ஒரு கை விழுந்தது.  திரும்பினாள். அங்கே....                                                         

 

 

மூன்றாவது நிறம் நீலம்.

 

               நீலம் வர்ணங்களில் தனி ஜாலம். தனிக் கோலம். நீளக் கடல் நீலம். நிர்மல வானம் நீலம். நஞ்சுண்ட நிமலன் நீலக் கண்டன். நீளக் கண்ணுடைய கண்ணனை நீலக் கண்ணன் என்பர்.  கண்களில் நீலம் இருந்தால்ää நிலம் ஆளும் பாக்கியம் சூழும்.

~நீலக் கடலலையோ....எந்தன்நெஞ்சினலைகளடீ..| என ஆச்சரியப்பட்டான் நீலத் தலைப்பாகைப் பாரதி. ~கண்களில் நீலம் படைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ.. | என்று வியந்தான் மருதகாசிப் புலவன்.  ~நீலப் பட்டாடை கட்டிக் கடலாடும்...| என்றான் நீலக் கண்ணன்தாஸன். நீள விலகலுடையது நீலம்.  நீல நிறத்திலில்லாவிட்டாலும்ää நீலப் படம் விரசம்.  நீலவானம் இரசனை. நீலமாணிக்கம் அணிந்தால் ஆயுள் நீளும்.

                    ஆஸ்மாää இருமல்ää மூட்டுவலிää வாதநோய்கள் முதலியன நீல ஆடைவகை அணிந்து வர சுகமாகும்.  சுவாசமும் நீளமாகும். நீலப் பொர்ப்பழம்ää அவுரிää என்பன நீலப் பழங்கள்.  ~எந்தோசியானின்ஸ்|ää ~அன்ரியாக்கிடன்ஸ்|ää ஆகிய உயிர்ப்புக்கள் நீலப் பழங்களுக்குண்டு.  பொதுவாக நீலம் மூளையையும் சீலம் செய்யும். தம் நீல நயணங்களால்ää நித்திலத்தையே நிறுத்தி வைத்தனர் அரசி கிளியோபட்ராவும்ää இளவரசி டயானா பார்மரும்.

 

ஆக்கிலா தனது நீல ஸ்காபைத் தளர்த்திச் சரிசெய்தாள். நீலக்குடையை விரித்து வான் நோக்கிப் பூக்கச் செய்தாள். வீதியில் பாதியில் இறங்கினாள். அப்போதுதான் தோளில் விழுந்தது ஒரு கை. திரும்பினாள். அதே சிட்டுக் கமலினி.

                    ~என்னம்மா ஆக்கிலா மெடம். இன்றவியூ எப்டீ...?|

                    ~எம்.எம்.ஏ. ஆக்கிலா ஐஅம்.  இன்றவியூ பிப்ட்டி!|

                    ~நம்பிக்கை உண்டா கண்ணு..|

                    ~நம்பிக்  கை  கொண்டா கண்ணு.|

                    ~பஸ்  ஸ்டான்ற் மட்டும் நடப்போம்  வா...|

                    ~பஸ்  ஸ்ட்ராற் ஆகு மட்டும் கிடப்போம்..போ..|

                    ~ஆக்கிலாää இன்னும் உம்மட பழைய கவிதைத் தனமும் நக்கலும் போகல்லைப்பா. சு;சாää யூனிவேர்ஸிற்றியில உம்மட புனைபெயர் வானவில் என்பதும்ää உம்மட ஆர்க்கீ கூர் மூக்கி என்கிற பட்டமும் எனக்கு ஞாபகமிருக்....||

                    ~அது மட்டுமல்லää கமலினி விஸ்வமித்ரன் என்ற இயற்பெயர் உடைய நீர் சிட்டு என்கிற புனை பெயரில் எழுதி வாஸித்த அந்த காரைதீவுக் கவிதை அடடா..உனக்கே மறந்திருக்கும். நான் சொல்கிறேன். உன் கவிதையை சரியா கூறு. செவியை என்னிடம் குவி. கமலீ.

                    யாரைத் தீ வைத்தாலும்

                    பேரைத் தீ வைத்தாலும்

                    என்

                    ஊரைத் தீ வைக்காதே - பாவி

                    காரை

                    தீவைத் தீவைக்காதே

                    மாரைத்

                    தீவைத்து மதுரையைத்

                    தீ வைத்த - கண்ணகி

                    பேரை வைத்த காரைத்

                    தீவைத் தீ வைக்காதே..!

இக்கவிதையை நீ 1993ம் ஆண்டு சித்த்pரை மாதம் எழுதி வாஸித்தாய்.  தவிரவும்ää  கிருஷ்ணமூர்த்தி என்கிற  ~கிட்டு| உன்னுடன் இட்டமாக கிட்டக்கிட்ட நெருங்கியதும் கூடத்தான் ஞாபக...|

~வெகு ஆச்சரியம். ஆக்கிலா என்றொரு அதிசயம்.  ஆக்கீää என் அழகான கூர் மூக்கீ.. நீர் சொன்தெல்லாம் என்னதெல்லாம் உண்மை எல்லாம்.  ஆக்கீää நீர் உம்மட முஸ்லிம் மஸ்ஜிதுல....|

~முஸ்லிம் மஜ்லிஸ்|

~அதுல உங்கட ~மிலேனியத்தை நோக்கிய விழிகள்..| என்ற பெண்ணியல் சார் ஆய்வு தங்கப் பதக்கம் பெற்றதும்ää பேக்கல்ற்றியையே அசர வைத்த கட்டுரை அது. வேந்தரே வியந்தாரே... நான் உங்கிட்ட என்ட ஓட்டோகிராபை நீட்டியதும்...ஞாபக......|

~நான் அதுலää கமலினிச் சிட்டேää கிட்டைக் கட்டிக்கிட்டு  கட்டுச் செட்டாய் வாழ்.| என்றெழுதி         நீட்டினேன்.கிராபை...|

~நான் கோபித்து   நீட்டினேன் விழிமுனை வாளை..

~நான் ஏகோபித்து காட்டினேன் அதோ பார் கல்முனை பஸ்ஸை.. ஏறு..கமலினிப் பெண்ணே..|

~நோ.. தொங்கி வருகிறார்கள். நாமேறினால்ää நம்மில் தாமேறுவார்கள் தறுதலைகள்.|

                    ~சரி வேறு பஸ் பாரு. அதுவரை நாமினி  ஏதுமினி  கமலினி...?|

                    ~குடிப்போமினி. வாருமினி. கூல்ட்ரிங்..?|

                    ~கூல் ஸ்பொட்..கூல் அப்..?|

                    ~கூல் டவுன்...டபுள் ஓக்கே.|

 ஆக்கிலாவும்ää கமலினியும்ää குளிரகம் நுழைந்தனர். உள்ளே நீலச் சாரல் வண்ணத்தில் நுரை ததும்பிய குளுமையில் குளிர் விளம்பரங்கள். ஸ்ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸீறக் காத்திருக்கும் சிலிர்ப்புச் சோடாச் சிதறல்கள். ஐஸ்கிறீம்.. நைஸ் கிறீம். மெல்லிதாக நுனியதிரும் ஜெல்லிகள்.. அள்ளிச் சிலிர்த்துச் சிரிக்கும் வெள்ளைக் காரி.. அவளது ஜெல்லி மார்புகள்... காலி மேசை தேடி அமர்ந்தனர்.  வெய்ற்றர் வந்துற்றார். மேசை துடைத்தார். காதைக் குடைந்தார்.

                    ~பலூடா ரெண்டு.| உள்ளதற்குள் ஓடர் கொடுத்தாள் கமலினி.

                    ~பல்லூடாh ரெண்டூய்ய்ய்|  உள்ளறைக்குள் ஓலம் கொடுத்தார் வெயிற்றர்.

                    ~பிறகெப்படி கமலீ. உம்மட கிட்டு.? நலமா உன் காதல்?|

                    ~அதையெப்படிச் சொல்ல.?| - கமலினி மௌனித்தாள்.

                    ~சொல்லச் சம்மதமானால் கேட்கச் சித்தமாயிருக்pறேன்...|

                    ~அவர்  அதில் சேர்ந்துட்டார்.. |

                    ~என்னது?|

                    ~ஆமாம்ää காரைதீவுப் பொறுப்பாளர்.|

                    ~அ..அப்படியானால் நீ...?|

                    ~காரைதீவுக் கைதி. யேஸ்ää எ பிரில்லியன்ற் யங் பிஜென் இன் ற்று பிரிஸன்.| பாவமாய்ச் சிரித்தாள். திடீரென விழியோரம் நீர்மணி தெரிந்தது. நீர்மணிக்குள் கூரையில் சுழலும் நீல மின்விசிறி தெரிந்தது. இரகஸ்யமாயத் துடைத்தாள்.

                    ~உன் அம்மாää அப்பா. அண்ணண்மார் குடும்பம்...?|

                    ~அப்பா  அப்பாலாகி ஒரு வருடம்.  அம்மா சும்மா. ஓரு அண்ணர் விழழுக்கிறைத்த வீணர். மறு அண்ணர் மாறாப் பொய்களில் விண்ணர். ரெண்டு குமர்கள். ஏதோ காலம் போகுது.. ஏனோ அகாலம் ஆகுது.. அது சரி உம்மட கதை..?|

                    ~என் கதை உன் கதை போல் கதை அல்ல. வாப்பா மிதி வண்டி மிதித்து போகையில் மிதிவெடி மிதித்து குதியிழந்த கதை.. உம்மா அம்மாள் நோயில் கண்ணாள் பாயில்..~கபாயா|ää ~ஹிஜாப்|ää கூலிக்கு வாதாடித் தைக்கிறேன்.. கேலிக்கு ஆளாகி வதைகிறேன். எ பிரில்லியன்ற் மெக்னன்ட் லிவிங் இன் ற்று ஹாஃப் ஹெல்....|

                    ~ப்ளடி ஹெல்.?|

                    ~ப்ளடி ஷிட்..!|

                    ~பலூடா  தயார்|

                    ~பருகுடா  டியர்..|

வெளியே வந்தனர்.பஸ் நிலையம் ஒரே பரபரப்பாக இருந்தது. இருவரும் விரைந்து நடந்தனர். தனியார் தரிப்பை அடைந்தனர். கல்முனை பஸ் தயார் நிலை.  உள்ளேறினர். எவருமிலர். வியந்தனர்.  சாரதி மட்டும் சரிந்திருந்தான். பயந்திருந்தான்.

                    ~பஸ் போகாது... இறங்குங்க..இறங்குங்க..|

                    ~ஏனுங்க..ஏனுங்க...?|

                    ~இடையில கிரான் குளத்தில பிரச்சினையாம்...|

                    ~என்னவாம்..?|

                    ~நேரடி மோதல்..அதிரடி சாதல்..|

                    ~அப்படியானால்...?|

                    ~இன்று பஸ் இல்லை. போக முடியாது.|

                    அதிர்ந்து போய் நின்றனர் ஆக்கிலாவும் கமலினியும்... அப்போதுää  சீறி வந்தன சில அதிரடி ஜீப்புகள்...

 

 

                                                   

நான்காவது நிறம் பச்சை

  

                              பச்சைää இச்சையைக் குறிக்கும். பச்சை வண்ணம் இச்சிக்கும் குணம். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. கிட்டத்துப் பச்சை மண்ணுக்கு மலர்ச்சி. பச்சையம் உயிர்களை வாழ்விக்கிறது. பச்சைக் கிளி என்றும் ஆசைக்குரியது. பச்சைவடம் மதிப்புக்குரியது.  பச்சைப் பொய் வெறுப்புக்குரியது. பச்சைச் சிரிப்பு ஆபாசமானது.  பச்சை விளக்கு அனுமதிக்குரியது. பச்சைக் குழந்தை கபடமில்லாதது. பச்சையரிசிப் பல் பரவசம். பச்சை மாணிக்கம் பார்த்தால் பார்வைக் கூர்மை ஓர்மை பெறும் என்பர்

                    பச்சை மரக்கறிää கீரைää என்பன பச்சைக்குரிய இச்சை  உணவுகள். ~லூட்டின்|ää ~ஜியாக்களான்ரின்|ää  என்னும் பச்சை உயிர்ச்சத்துக்கள் மாரடைப்பை நிச்சயம் தடுக்கும்.  இச்சா சக்தி உச்சம் மீகும்.  சிற்பப் பெண்களின் கற்பக் கோளாறுகள் நீங்கும்.

                    ~பச்சை நிறமே..பச்சை நிறமே.. இச்சை கொண்ட  பச்சை நிறமே....|என்று வியந்தான். வைரமுத்தன். ~பச்சைக் கிளி...முத்துச்சரம்..முல்லைக் கொடி யாரோ...| என்று தடுமாறினான் புலமைப் பித்தன்.

 

ஆயினும் ஆக்கிலாவுக்கும்ää கமலினிக்கும் இப்போது பச்சையை இரஸிக்கும் இச்சை இல்லை. 

 

                    பச்சைநிற ஜீப் வண்டிகள் இரண்டு வெருண்டு  விர்ர்ரென்று சீறி நின்றன. அழுக்குப் பச்சை சீருடையோர் ~பச்சக்ää பச்சக்|கென்று குதித்திறங்கினர்.  பச்சைச் சிங்களத்தில் உத்தரவுகள் இட்டனர்.  பரபரவென்று  பச்சை மரங்கள் நோக்கி ஓடி நிலையெடுத்துப் பதுங்கினர்.  பொதுமக்கள் முகங்கள்; பச்சடித்துää குரல் பொச்சடித்து  விறைத்தன. ஆக்கிலாவும்ää கமலினியும்  இருகரம் பற்றி ஒருமரம் பற்றி ஒடுங்கினர். பச்சைச்சீருடைச் சிங்களக் கோப்ரல்  பெரிய குரலில்ää

                    ~எங்கட சிங்கள ஆமி எட்டு ஆக்கல் அற்றாக் வளின் செத்தது. எல்ற்றிற்றி வெட துந்நா. ;எத்தக்கொட்ட நாங்க செக் பண்றது.|

என்றான் பச்சைச் சிங்களமும் ää கொச்சைத் தமிழும் கலந்து. சுற்றி நின்றோர் வரிசைப்;படுத்தப்பட்டனர். இம்சைப்படுத்தப்பட்டனர்.. நெரிசல்படுத்தப்பட்டனர்... ஆளடையாள அட்டைகளை ஒப்புவித்தனர். ஆக்கிலாவும்ää கமலினியும் வரிசையில் வேறாக நின்றனர்.  லான்ஸ் கோப்ரல் அவர்களைத் தனியாக நெருங்கினான்.  எச்சில் விழுங்கினான்.  மிக அருகில் அவனது  சவரம் செய்த முகத்தில் பச்சைத் தடம் தெரிந்தது. கமலினி ஆக்கிலாவின் தோள்களைப் பிடித்து பயத்தில் பாதி மறைந்தாள்.

~ஓகொல்லோ   கவ்த...?|

~அபி...யூனிவேர்ஸிற்றி  ஸ்டுடன்ற்ஸ்....|

~யுனிவேர்ஸிற்றி.......?|

~விஸ்வ வித்தியாலய...யாப்பனய.|

~ஐடென்டி தியனவா...?|

~ம்...ஏய் கமலினிää  எடன்டி உன் ஐடென்டி.|

பெட்டைகள்கொடுத்தஅட்டைகளைப் பெட்டைகளைப்பார்த்தபடியே புரட்டிப் புரட்டிப் பார்த்தான் கோப்ரல்.

~ம்..? ஓ....யாப்பன விஸ்வவித்யாலயத..? எஹெனம் கொட்டித்தெக்க டிக்கக் சம்பந்தய்...ஒய   ---ஊடாப்பாத்துவää மெயா கார்தீவ்......கோமத  மெ........?|

~இன்ற்றவியூ ஒண்டுக்கு வந்தம் நாங்க........|

~ஒயா முஸ்லிம்.....மெயா தெமள......?|  கண்டுபிடித்தான் கோப்ரல். பின் முரண்டு பிடித்தான்.

~ஒயா ஸிங்கள...........|  சொண்டடித்தாள் ஆக்கிலா.

~மொனவத கிவ்வே......?|

லான்ஸ் கோப்ரல் கோபமுற்று  மற்ற ஜீப்;புக்கு (சை) கை  காட்ட ஒரு அதிரடிப் பெண் பச்சை சீருடையுடன் பாய்ந்திறங்கி வந்தாள். கோப்ரல் கண் காட்ட அதிரடியாள்  துடிதுடிப்பாய் இவர்களை நெருங்கினாள்.  கமலினி நடுநடுங்க.. ஆக்கிலா சிடுசிடுத்தாள்.  அதிரடியாள் இருரையும் ஒரு பஸ்ஸின் மறைவுக்கு அழைத்தாள். சென்றார்கள். அதிரடியாள் மென்மைக் குரலில் வண்மையாக ஆணையிட்டாள்.

~களவண்ட ஒக்கோம.....|

~என்னது......?|

~எல்லாத்தையும் கழட்டச் சொள்றாள்...|

~எதுக்கு.......?|

~களவன்னங்கோ..இக்மனின்|

~பார்க்கனுமாம்...|

~இக்மங் கரண்ட.....|

துப்பாக்கியைக் கழற்றினாள். அவர்களை ஆடைகளைக் களைய அவசரப்படுத்தினாள். ஆக்கிலா சற்று நிதானப்பட்டு சிறிய பயப் புன்னகையுடன்  அதிரடியாளை நோக்கினாள். கண்களில் சிறிது நீரைத் தேக்கினாள். கொஞ்சம் விக்கினாள்.. சிங்களத்தில் திக்கினாள்.

~மெ.. எஸ்ரிஎப் நோனாää அபி கொட்டி நெவே..விஸ்வவித்தியாலய ஸிஸ்யோ..!|

~விஸ்வ வித்தியாலய...........?|

~ஒவ். நோனா..அப்பி  ஆவே  சம்முவ பரீக்ஷனயக்கெட்ட|

அதிரடியாள் முகத்தி;ல் சற்றுக் கடுமை குறைந்தது. மெல்லிய புன்னகை பிறந்தது. பயம் மறைந்தது.

                    ~ஹரி..ஹரி யண்ட..| என்றாள். கூர்மையாய்ப் பார்த்தபோது சற்றே அழகாக இருந்ததாகவும் தோன்றியது. நிம்மதிப் பெரு மூச்சுடன் முன்னால் வந்தனர்.

                    ~இவரய் இதிங் சார்ஜன் ஸேர்...| என்றாள்.

      லான்ஸ் கோப்ரல் அடையாள அட்டைகளைக் கொடுத்தான். போக அனுமதித்தான்.  பஸ்நிலையம் விட:;டு வெளியே வந்தனர்.  வாகனமேதுமின்றி சாலை வெறிச்சோடியிருந்தது. தூரத்தே துப்பாக்கி வெடிச்சத்தங்கள்... பதிலடிகள்..... ஆக்கிலாவும் கமலினியும் தைரியம் கடன் வாங்கி விரைவாக நடந்து  அவசரமாக எதிர்ப்பட்ட ஒரு சந்துக்குள் நுழைந்தனர். வீடுகள் வரிசையாகத் தெரிந்தன.  சட்டென்று ஒரு கதவைத் திறந்துட் புகுந்தனர்.

                    கட்டிக்கிடந்த கறுப்புக் குதிரை போலிருந்த ஒரு நாய் இவர்களை உடனடி விரோதியாகப் பாவித்து ~ளொள்..ழோhள்..| என்றது. கமலினி நாய்க்குப் பயந்து ஆக்கிலாவின் கைகளைப் பிடித்தாள். உள்ளிருந்து ஒரு மாமி வெளிவந்து நாயைப் பார்த்துää ~டாக்கீ...ளொள்.....| என்றாள். உடன் குதிரை நாய் அடங்கி  எலி நாய் ஆகிச் சுருண்டது.  ஆக்கிலாவின் ~பர்தா|வும்ää கமலினியின் நெற்றிப் பொட்டும்ää இணைந்து வந்த விநோதத்தைக் கண்டு திடுக்கிட்டுää பின் மினக்கெட்டு தானே ஒரு முடிவெடுத்து இவர்களிடம் அடியெடுத்து வைத்துக் குரலெடுத்து  மாமி-

~ஆரப்பா நீங்கள்? கலை நிகழ்ச்சிக்கு  வாங்கிட்டமே நாங்கள்..டிக்கட்..|

                    ~வெளி ஊரப்பா  நாங்கள்..விற்க வரயில்ல டிக்கட்.....|

                    ~அப்போ..கிறிஸ்டியன்ஸ் புக்கா...நாங்க சைவம்..|

                    ~அப்போ...ய்...அதெல்லாம் இல்ல...நாங்க பாவம்..|

~என்ஜீஓ ஆக்களா..அகதிகளுக்கு நேத்து குடுத்திட்டமே பட்டு வேட்டிää கொட்டுக் காற்சட்டைää   எட்டு நைற்றிää கட்டுச் சல்வார்.........|

                    ~வெட்டு கதையை..ஷட்அப்..மாமி..|  

ஆக்கிலா சிலிர்த்துச் சிறியதும்ää கமலினி மாமியை பலவந்தமாக உள்ளே தள்ளிää

                    ~மாமீ...வெளிய ரவுண்டப் நடக்குது..  நாங்க யுனிவர்ஸிற்றிப் பெட்டைகள்....|

                    ~ஹையோ......என்னது  எல்றிற்றிப் பெட்டைகளா...? |

                    ~ஐயோ..........யுனிவர்ஸிற்றி...மாமி...பல்கலைக்கழகம்...| கத்தினாள் ஆக்கிலா..வெட்கினாள் மாமி.

                    ~ஓஹ்.....ஏன் வந்தனீங்க......சாமி..சாமி...?|

                    ~ஆஹ்...வெளிய ரவுண்டப்...மாமி...மாமி..|

                    ~அதுக்கு.........ஆரைக் கண்டு...........?|

                    ~இதுக்குள் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாமிண்டு...........|

இதற்கிடையில் மாமியின் மாமாவும்ää மாமாவின் அம்மாவும்ää அம்மாவின் அக்காவும்ää சூழ்ந்தனர். மாமி தன் வெட்கத்தை  கக்கத்தில் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு-

                    ~இவங்க யுனிவர்ஸிற்றி கேர்ள்ஸாம்.. இத முதல்லயே சொல்லியிருக்கலாமே.....?|

                    ~நாங்க யுனிவரிஸற்றி கேர்ள்ஸ்தான்.. இத முதல்லயே சொல்ல விட்டால்த்தானே......|

                    ~இருங்க இப்படி...ரீ குடிங்க...|

                    ~சரிங்க...|

உட்கார்ந்தனர். டோக்கீ ~ள்ள்ள்ள்ள........| என்று சோம்பல் முறித்தது. கமலினி சிரிப்புடன் ஆக்கிலாவைப் பார்த்து-

                    ~ஆக்கீ.........நாய்க்கி பெயர் கேட்டாயா...? டோக்கீ...!|

                    ~தூக்கீ எறிவேன் தாக்கி..|

 

டைம்கீ  ஒன்று இருபது என்று காட்டியது. மாமி முழுமுழுக் கிளாஸில் இளம் பச்சைக் குளிர்பாணம் கொணர்ந்தாள்.  இவர்கள் தாகமாகவிருப்பதாக உணர்ந்தாள்.

                    ~குடிங்க..எவடம் நீங்க....பிள்ள நீர் முஸ்லிமா..  நீர் சைவமா வேதமா? |

                    ~நான் ஊதாப்பத்து.|

                    ~நான் ஊதும் பத்து.|

                    ~நான் ஊதணும் அடுப்பு..நீங்க இருங்க..கொஞ்சப் போதில் கிளிரயராகிடும்.. போகலாம் நீங்க...|

மாமியின் தேறுதல்..மனதில் ஆறுதல்.. வாகனம் காலை வாருதல் ஆனால்ääää ஊர் போய்ச் சேருதல்...? வேறு நல் வழியின்றி இருவரும் ஒருமணித்துளி கருமணிவிழி பூக்கக் காத்திருந்தனர்.. ரவுண்டப் முடியப் பார்த்;திருந்தனர். மாமாவின் குறுவிழித் துளைப்பைப் பொருட்படுத்தாதிருந்தனர். டோக்கியின் பார்வையைச் சகிக்காதிருந்தனர்....திடீரென  ஆக்கிலா கேட்டாள்...

                    ~சிட்டே..உன்னிடம் என்ன கேட்டனர் இன்ற்றவியூவில்...?|

                    ~அடடே..சொல்ல மறந்தேன்..முதல் கேள்வி..பூமியின் மையப் புள்ளி எது?|

                    ~என்ன சொன்னாய்?|

                    ~பூமியின் விட்டத்தின் அரைப்புள்ளி குறிக்குமிடம் என்றேன்....|

                    ~ஹட.....அடுத்த கேள்வி?|

                    ~ஐந்து கதிரைகள் மூன்றில் நாங்கள் ஒன்றில் நீங்கள்.. மற்றது யாருக்காக...?|

                    ~என்ன சொன்னாய்..|

                    ~உலக வங்கிப் பிரதிநிதிக்காக...|

~                 ~ச்சா..மூன்றாம் கேள்வி..?|

                    ~சிக்கலான ஒரு கணக்கு. ஆனால்ää விடை ரோபோவில் இருந்தது...|

                    ~நம்பிக்கை உண்டா உனக்கு?|

                    ~ஆக்கிக்குக் கிடைக்காவிட்டால் எனக்குக் கிடைக்கும்...|

                    ~உன்னிடம் என்ன கேட்டனர்...?|

                    ~உன்னிடம் என்ன கேட்டனரோ அப்படியே...|

சட்டென மாமி ஓடி வந்தாள். டோக்கீ ~ளொள்வ.வ.வ.| என்றது.

 

                    ~பெட்டையள்..வெளில ரவுண்டப் முடிஞ்சுது.. வாகனம் போகுது..|

                    ~தேங்க்யு  மாமீ|

                    ~வெரி தாங்க்ஸ் டோக்கீ...போகலாமா ஆக்கீ........?

~கிட்டுமா வாகனம் நமக்கினி..?|

                    ~எட்டி நட என் சிட்டுக் கமலினி...|

வீதியில் இறங்கினர்.. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சனங்கள்..வாகனங்கள்..சைக்கிள்கள்..பாதி மூடிய கடைகள் மீதி திறந்தன..பிரதான சாலைக்கு வந்தனர். தூரத்தே  வீதி ஓரத்தே.. கல்முனை பஸ்.....

                    ~ஓடடி.......! மினிபஸ்ஸடி...|

                    ~ஓடாட்டி.....? இனி மிஸ்ஸடி..|

ஓடிச் சென்றனர். பாடி வந்த மினிபஸ் இவர்களை நாடி ஏற்றிக் கல்முனை சாலை தேடி ஓடியது...

 

 

ஐந்தாவது நிறம் மஞ்சள்.

 

மஞ்சள் மங்களகரமானது. மஞ்சள் பூசி மஞ்சம் கொண்டால்ää மகிழ்வு கூடும் என்பர். அந்திககுப் பிந்தியää இருட்டுக்குச் சற்று முந்திய மஞ்சள் வானம் வெகு அழகு. மஞ்சள் கயிறு பாதுகாப்புக்குரியது. மஞ்சள் கோடு அவதானத்துக்குரியது. மஞ்சள் பத்திரிகை ஆபாசமானது. மஞ்சள் நீராட்டு மலர்வுக்குரியது. மஞ்சள் பட்டை மருத்தவக் குணமுடையது. மஞ்சட் பொட்டு மகத்துவமானது. மஞ்சட் காமாலை அபாயமானது.

மஞ்சள் நிறத்துக்குரிய பழங்களாக வாழைப்பழம்ää தாவுள்ää மாää கனித்தோடை தக்காளி என்பன உண்பன. மஞ்சட் பழங்கள் தொழுநோயால் இழுபடுவதைக் குறைக்கும். மலச்சிக்கல்ää பித்த ரோகங்கள்ää கண்குறைபாடுகள் ஆகியவற்றைத் தணிக்கும்.

~சூரிய மஞ்சளை எடுத்து அந்தி வானத்து அம்மியில் அரைத்து......| அழகு பார்த்தான் கவிப் பேரரசன்.  ~மஞ்சள் முகமே வருக.. மங்கள விளக்கே வருக.....| என வரவேற்றான். கவியரசன்.

 

மஞ்சள் வண்ண ~ஹிஜாபி~ல்ää கடுமஞ்சள் நூலால்  பூ வேலைப்பாடு நெய்து கொண்டிருந்தாள். ஆக்கிலா. 

~கொஞ்சம் கோப்பி இருந்தா   தா புள்ள...| என்றாள் மஞ்சட்காய்ச்சல் உம்மா.

~அஞ்சாறு கிளமையாயிட்டு வேங்கு இணடவிய் போய். ஓண்டுக்கும் பதிலில்லை...| என்ற வாப்பா தனது ஊத்தை மஞ்சட் தொப்பியை அணிந்த கொண்டே பள்ளிக்குப் பறப்பட்டார்.

~பொட்டய அதிகமா படிக்கவெய்க்க வேண்டாமெண்டன்.. கேட்டாத்தானே...|

~அட்டையப் போல சுருளாம வாய மூடு. பொட்டைக்கென்ன...பட்டதாரி அவள்.........|

~பட்டதாரியாக்கிட்டு  நான் வெட்டதாரிதாரியாகிப் பாய்படுக்;கைதாரியாகியதுதான் மிச்சம்...|

~பட்டதாரிக்கு உத்தியோகம் கட்டாயம் குடுக்கணும்...சட்டம்...|

                    ~என்ன சட்டமோ....அவளுக்கு  மாப்பிள்ள எடுக்கிற கட்டம்..இருக்கா ஊடுகீடு கட்டுற திட்டம்..?|

~நொட்ட ஆரம்பிக்காம கட்டயைச் சாத்து.. புள்ளே..எனக்கும் கோப்பி...தாடா..|

~விட்ட விடிய ரெண்டுபேரும் கிட்டத் தொடங்கியாச்சா....?|

 வட்டத் தட்டில் மூன்று கோப்பி கொண்டு வந்த அக்கிலா அவைகளைப் பகிர்ந்தளித்த போது வெளியே மஞ்சள் தகட்டுப் படலையில் தட்டும் ஒலியைத் தொடர்ந்து அழுக்கு மஞ்சள் சீருடைத் தந்தித் தூதுவன் உள்வந்தான்.

~பிள்ள ஆக்கிலா முக்தாரு...எக்ஸ்பிரஸ் லெட்டர்...நல்ல மேட்டர்...|

~கொடு..கொடு..கொடு..என்கிட்ட..| பதறினார் வாப்பா.

~விடு..விடு..விடு..| என்ற சேவகன் திடு திடுவென உள்நுழைந்து ஆக்கிலாவிடம் கையெழுத்துப் பெற்றுக் கொடுக்க- குடு..குடு..வென்று ஆக்கிலாவிடம் ஓடினார் வாப்பா.

~பிரி..பிரி..பிரி..பார்|

படபட நெஞ்சுடன் ஆக்கிலா தைரியம் சேர்த்தாள். உறையைப் பிரித்தாள்.;..உள்ளிருந்தது ஒரு தாள். விரித்தாள். வாசித்தாள்.. சிறிது யோசித்தாள்... பின் புன்னகைத்தாள்...வாப்பாவைப் பார்த்தாள்..வேர்த்தாள்...மகிழ்ச்சியில் ஆர்த்தாள்...

SELECTED IN FIRST RANK. AND  YOU ARE APPOINTED TO THE POST OF  ASSISTANT REIGIONAL MANAGER AT  G.K.I. BANK WITH EFFECT FROM...................

மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன ஓரு மாயப் பிரமையாய்... ஆக்கிலா காற்றில் மிதந்தாள் ஒரு கனவுத் தேவதையாய்....மஞ்சள் பூங்கொத்துகள் ஆடின...மேகங்கள் ஓடி வந்து பாதங்கள் தாங்கின...நாதங்கள் ஒலித்தன.....

~வாப்பா..எப்பொய்ன்ட்மென்ட் லெட்டர்..வேலை கெடைச்சுட்டுது..|

~அல்ஹம்துலில்லாஹ்.....|

குதியிழந்த காலை மறந்து ததிபுதிப் பட்டு  அதி மகிழ்ச்சியில்  குதியெனக் குதித்து மிதித்துத் தடுமாறி தரையில் விழுந்து பதிந்தார் வாப்பா..  நோய் மறந்து தாவியெழுந்து தாய் ஆக்கிலா மீது பேய் போல விழுந்தாள்....நெஞ்சம் நிறைந்து வாய் விட:;டுச்சிரித்தாள்...

~வாப்பா காரைதீவுக் கமலினிக்கு ஒரு ~கோழ்| எடுத்திட்டு வாரேன்....| தொலைபேசி இருந்த வீட்டுக்கு ஓடினாள்.. ஒலிவாங்கியை நாடினாள்.. இலக்கங்களைத் தேடினாள்.. சுழற்றினாள்.

~ஹெலோ..பக்கத்து வீட்டுக் கமலினியை அழைக்க முடியுமா..ப்ளீஸ்;;.? நான் ஆக்கிலா...|

பரபரப்பான சில விநாடிகள் காத்திருந்த போதினிலே காதுகளில் சிட்டுக் கமலினியின் குரல் தேனாய் வந்து உற்சாகமாய்ப் பாய்ந்தது காதினிலே...

                    ~ஹெல்லோ ஆர்க்கீஈஈஈஈ|

~சிட்டூ..லெட்டர் ஏதும் கிட்டியதோ சிட்டுஊஊ?|

~டு;ட்டூ!  சற்று முந்தி தந்தி வந்தி ருந்தது..~எப்பொய்ன்ட்மென்ட்|தான்..எப்படிச் சொல்ல என் மகிழ்ச்சியை..உடனே ஜீ.கே. வங்கிக்கு ~கோழ்|; எடுத்துக் ~கென்பர்ம்| பண்ணிட்டன். அப்படியே உனக்கு ~கோழ்| எடுக்க வெளிக்கிட்டபோதுதான்  நீயே எடுத்திட்டாய்......பதினெட்டுப் பேரில் மூன்று பேருக்குத்தான் ~எப்பொய்ன்ட்மென்ற்..| நானொன்டு....நீயொன்டு....|

~இன்னொண்டு.....?|

~என்னண்டு சொல்ல...? விதூஷிஹாவுக்கு அண்ணனெண்டு சொல்லிய அந்தக் கண்ணொண்டு சின்னொன்டாய்; வந்தானே ராமகிருஸ்ணனெண்டு....அவனொண்டு...|

~அட...மண்டு...எல்லாம் சரி ...என்னண்டு போறது...எப்ப..?

~நாளையன்டைக்கு வரணுமெண்டு சொன்னாங்க...வேனொண்டு புக் பண்ணுவம்ண்டு...|

~வேனொண்டா...? .வேணாம்டா....காசெண்டு கேட்பானே ஆயிரம் ரெண்டு...மண்டு...!

~அப்படியெண்டால்.......?|

~எப்படியெண்டாலும்ää நீ  நாளையண்டைக்கு எட்டு மணிக்கெல்லாம் பத்தினிக் கோயில்பதிக் ஹோல்ற்றில் நில்லு. உனக்கொன்று எனக்கொன்றாய் ~ஸீற்| ~ரிஸர்வ்| பண்ணி நான் வருவேன் கொண்டு...கண்ணு.....வேறென்ன சொல்லு.........?|

~  யூ  {வேர்?|

~யெஸ் டியர்..|

~ஸோ வாட்...இன்னொண்டு சொல்ல மறந்தேன்... நமக்கு ட்ரைனிங் எங்க தெரியுமா...?|

~தெரியாது.|

~ஜீ.கே இன்டர்நஷனல் பேங்க் ஷங்காய் சி;ற்றி பிராஞ்....|

~இது எங்காய் இருக்கிறது  தங்காய்...? ஷங்காய்...?|

~ஆக்கிலா  நங்காய்.....ஷங்காய் இஸ் எ ஸெகண்ட் கெப்பிற்றல் ஒவ் சிங்காய்.......|

~வாட்;;.......?|

~சிங்கப்பூர்..|

~ஓஓஓஓ...தாங்க்  கோட்...|

~டெலிபோன்  கட். நேரில் மீட்...!|

ஆக்கிலாவுக்கு சிங்கப்பூர்  வங்கியில் மனேஜர் என்று ஊரெங்கும் யாரென்றும் பாராது பாரெங்கும் நீக்கமற செய்தி பரப்பியிருந்தார் வாப்பா.. உம்மா மஞ்சட் பற்கள் துலக்கி மகளிர் அணித் தலைவியாகி தெம்புடன் முரசறைந்திருந்தாள்...

இரண்டு நீண்ட நாட்கள் போக மறுத்தன... தாமதித்தன... ஆக்கிலாவின் வேல் விழிகள் தூக்கமிலாது நீள் விழிகளாயின... வாசலெங்கும்  நட்சத்திர விதைகள் நாட்டினாள்..அவற்றுக்குää சொர்க்கத்தில் பன்னீர்  கடன் வாங்கி வந்து வார்த்தாள்... நட்சத்திர மலர்கள்  கலர்கலராய்  வாசலெங்கும் பூத்தன... வாசமெங்கும் பரவின.....ஆக்கிலாவின் கனவுத் தேசமெங்கும் தேவதைகள் வந்து சேவைகள் செய்தன... ஆக்கிலா இளவரசி பசியாற நிலவரசி வந்து நிலவரிசி சமைத்து    ஊட்டிவிட ஒளிவரிசையில் நின்றாள்...கடவுளின் சிரிப்பில் புது அர்த்தம் இருந்தது..... கனவு முடிந்தது. காலை விடிந்தது.........துயிலெழுந்தாள்...இன்று...........?

 

ஆறாவது நிறம் செம்மஞ்சள்.

 

அதிவிடியல் செம்மஞ்சள். அந்தி வானம் செம்மஞ்சள்.. மஞ்சள் பூசி மையல் கொள்ளும் மங்கையர் தம் நாணமுறு கன்னங்கள் செம்மஞ்சள்.  எம்மஞ்சள் என்றாலும் அம்மஞ்சள் செம்மஞ்சள் போல் அம்சமாயில்லை.

ஓரெஞ்ச்ää பப்பாளிää இலந்தைää மாம்பழம்ää கரட்ää பூசணிää விளாää அன்னாசி என்பன செம்மஞ்சள் பழங்கள்.  இவற்றிலுள்ள  ~க்ரைப்போட்ளான்ரின்|ää ~அல்பா| புற்றுநோயையும் சற்றே குணமாக்கும். குருதி  விருத்தி பெறும்..நரம்புகள் முறுக்கேறும்..

செம்மஞ்சள் பட்டும்ää செஞ்சாந்துப் பொட்டும்ää இழுக்குதடி என்னை......| என இழுபட்டான் அவினாசிமணிக் கவிஞன்...~ஆரஞ்சுக் கன்னமோ..அழகு வண்ணக் கலரோ.....| என வாய்பிளந்தான் கவிகாமுப் புலவன்..

 

இளமஞ்சள் நிறத்தில்ää செம்மஞ்சள் மலர்கள் பூ10த்துச் சிதறிய ஸல்வார்ஹமீஸ் அணிந்து செம்மஞ்சள் ~ஸோல்| தோள் தழுவி மேலேறி கார்குழல் மறைத்து கூர்முகவழகை மேலுமோர்படி கூட்ட ஆக்கிலா  தயாரானாள்.  இன்று முதல் வேலை தினம்.

~வாப்பா....நான் ரெடி|   என்றாள்.

உம்மாவும்ää வாப்பாவும் அவள் எதிர் நின்றனர்.. பசி நெருப்பில் வயிறெரிந்துää சேமித்துப் படிப்பித்துக் நோயுற்றுää உருச் சிறுத்த உருவங்கள்... எல்லாம் இவளின் பிரகாசத்திற்காக தம்மை உருகு திரியாக்கிய  பெற்றோர்.........ஆக்கிலாவுக்காக...!

~அல்லாஹ்ட  காவல்......மகள்.. கவனம்..|

~பிஸ்மில்லாஹ்..|

வலது பாதம் முதலில் வைத்து சடுதியில் வீதியில் பாதியில் இறங்கித்  திரும்பிää  மஞ்சள் பூக்குடை விரித்துச் சிறிதாய்ப் புன்னகைத்து........திரும்பியும் பாராமல் விரைந்தாள் ஆக்கிலா.. எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறும் இந்நாள். நன்நாள்.. கன்நாள்ää  இப் பெண்ணாள் காத்திருந்த பொன்நாள்....இன்று  முதல் வேலை நாள்.

பேரூந்து தரிப்பிடத்தில் தயார்நிலையில் செம்மஞ்சள்நிற மட்டக்களப்பு பஸ்.. உள்ளேறினாள்... மெல்லேறினாள்.. இரட்டை ஆசனம் வேண்டிப் பெற்றாள்.. சிட்:டு காத்திருப்பாள்  காரைதீவில்...

அரைமணி நேரம் ஆள்தேடி.. நிரப்பி.. அடுக்கி பதுங்கித் தவழ்ந்து  காலை எட்டைந்து தாண்டியபோது பாண்டிருப்பில் ஆக்கிலா வேண்டியபடி  பத்தினிக் கோயில் பதி தாண்டியதும்; அருகில் பேரூர்ந்து சற்றுத் தரிக்க-

சிறுபிறை நெற்றிப் பொட்டுடன் மஞ்சள் சுடிதார் செட்டுடன்  பேரூர்ந்தில்; தாவினாள் சிட்டுக் கமலினி.  ஆக்களிடை ஆக்கிலாவைத் தேடினாள்..

~ஷ்;ஷ்ஷ்... கமலீ..இங்கே  வா...|   விரிசையிடையிருந்தாள் ஆக்கிலா

~ஷ்ஷ்ஷ்;;.. அப்பாடா.. அங்கேயா..?|  நெரிசலிடையுட் புகுந்தாள் கமலினி.

                    ~குட்மோர்னிங்  ஆர்க்கீ..|

                    ~ஸேம்  ட்டு யூ  கார்க்கீ..|

மறுபடி பேரூர்ந்து பேரூர்  பெயர்ந்தது. எந்நேரமும் எதுவும் நடக்கலாமெனும் போர்க்காலம்...பிணங்கள் தின்னும் பேய்க்காலம்.. முக்காலும் பயணிகள் முகங்களில் சாக்காலம் நோக்கலாம்... மறுபடி சோதனைச் சாவடிகள்...சோனையிடல்கள்..அதிரடிப் படைகள்... கவனம் மிதிவெடிகள்... இடையிடையே துணைப்படைகள்.. துரேகத்தின் அடிப்படைகள்... இறங்கிää நடந்துää ஏறிக்கடந்துää ஆடி நடந்துää ஆறடி ஊர்ந்துää அடைந்தது மட்டக்களப்பு ஊரு. பேரூர்ந்து.....

~அப்பாடா....இறங்கலாமினி....கமலினி..|

~ஆமாண்டா... நமக்கினி..நடையினி..|

நடந்தனர். அடைந்தனர். நுழைந்தனர்.. பிராந்திய முகாiமாளர் பிரத்தியேக அறை போய்ச் சேர்ந்தனர். ஏற்கனவே  அங்கு இராமக்கிருஸ்ணன் காத்திருந்தான். செம்மஞ்சள் ஐரோப்பியர் இருந்தார்.  இவர்களைக் கண்டு மகிழ்ந்தார்.

                    ~வெல்கம் கேர்ள்ஸ்...| என்றார். கை தந்தார்.. குலுக்கினார்.. ஆங்கிலத்தைக் கிலுக்கினார். வாழ்த்;தினார். சொன்னார்.

                    ~என் பெயர் மேக்மில்லன் பரூச்சர்...மேற்கு ஜர்மனில் பருலின் சிற்றி....திருமணமாகி பின் பிரிந்தேன்....மனைவி இந்தியனுடன் வாழ்கிறாள்.. விட்டுவிட்டு ஜீ.கே. வங்கியில் அஸிஸ்டன்ற் கிளரிக்கலில் சேர்ந்தேன்.. முழு மூச்சாக உழைத்தேன்..எல்லா பரீட்சையும் பாஸ் செய்தேன். இப்ப  பிராந்தியங்களின் இணைப்பு முகாமையாளராக இருக்கிறேன்.. பிரத்தியேகமாக எனக்கு மட்டும் ~கட்டர்பில்லர்| என்ற குட்டி விமானம் தந்திருக்கிறது வங்கி....

கொஞ்சம் பேச்சை நிறுத்தி இவர்கள் மூவரையும் பார்த்தார் அழுத்தி. மறுபடி ஆரம்பித்தார்.

                    ~நமது வங்கி உலகின் மூன்றாவது வர்த்தக வங்கி.. இரண்டு தடவைகள் ஐ.நா. விருது வென்றது.. நியூயோர்க்ää இலண்டன்.. சிங்கப்பூர்ää ஒஸ்ட்ரேலியாää ஜேர்மன்ää கனடாவில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. ஐயாயிரம் கோடி அமெரிக்க டொலர்களை முதலீடாக வைத்து உலக வர்த்தகத்தைக் கட்டிப் போட்டிருக்கிறது....உங்கள் மூவருக்கும் பிராந்தியங்களின் உதவிப் பயிற்சி முகாiயாளராகச் செயற்பட பயிற்சியளிக்கும் ஏழு வாரம்... பின் பரீட்சை...அதி கடினம். .மூளையின் ~பின்ற்ரேஸன்|கள் வெடிக்குமளவுக்கு இருக்கும்... சித்தியடைந்தால் பதவிச் சொர்க்கம்.. சித்தியடையாவிட்டால் பயிற்சியோடு சாதாரண கிளரிக்கல்... எல்லாச் செலவுகளும் வங்கி பொறுப்பேற்கும்.. அண்டவேர்  உட்பட......

என்று வெடிப்பொலிச் சிரித்தார்.. ஆளுக்கொரு செம்மஞ்சள் பொன்னெழுத்தில் பொறித்த பைல்கள் தந்தார். சிக்கலான வாhர்த்தைகள் கொண்ட ஸீ.டீ.க்கள் தந்தார்..உடனடிப் பணம் பெறும் ~மணிக் கார்ட்|டுகள்  தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியில் தந்தார்...மறுபடி சொன்னார்..

 

                    ~இன்றைய உங்கள் மகிழ்ச்சியான தினத்தை முன்னிட்டு என்னோடு பகலுணவு அருந்த அழைக்கிறேன்...அதுவரை இந்த வெப் தளத்தைப் பார்வையிடுங்கள்.. உள்ளவற்றை மூளை உள்ளவரை உள் வாங்குங்கள்.. இதில் ஒப்பமிடுங்கள்.. நன்றி..|

                    உடன் விடை பெற்றுச் சென்று விட்டார்...சீருடைப் பணியாள்  உயர் ரக குளிர்பானமும் மென் போதை மதுபானமும்ää    கிழங்குச்சீவல்களும்  கொணர்ந்தான்.. பணிவுடன் வைத்தான்... சென்றான்...

ஆக்கிலாவும் கமலினியும்ää இராமக்கிருஷ்ணனும் திகைப்பான கனவுலகில் இலயித்துப் போய் சில நிமிடங்கள் பேச மறந்திருந்தனர்....

~...........   .............   ..............?| என்று கேட்டாள் கமலினி.

~.........   ..............   ..............|  என்றாள் ஆக்கிலா

 ஆக்கிலா கமலினியுடன் கேட்போர் கூடத்திற்கு வந்;தாள்..அங்கிருந்த கணிணியில் ஜீ.கே வங்கி இணையத்தளத்தைப் பார்வையிட்டனர்...ஆரம்ப வலாறுகள்.. மூலதனங்கள்...சர்வதேச வர்;த்தகத்தில் சிக்கலான ஆங்கிலச்சொற்கள்..தாண்டிய தடைக்கற்கள்..கொடுகடன்ää படுகடன்ääஎடுகடன்..உடனுக்குடன்...

விபரங்கள்...ஊழியர் சேம நலன்கள்.. பயிற்சி அறிமுகங்கள்... கால்ää அரைää இறுதி ஆண்டறிக்கைகள்.......திகைப்பான வங்கி உலகிலிருந்து மீண்ட போது பகலுணவுக்கு அழைப்பு வந்தது..  ஏ.ஆர்.ஓ வுடன் மினக்கெட்டுச் சாப்பிட்டு இறுதி உபதேசங்கள் பெற்று நாளைய கடமை பொறுப்பேற்று நான்கு மணிக்கு எல்லாம் முடிந்தன...............

~கமலினி இனிப் போகலாமினி..|

                    ~வாருமினி....பஸ்ஸேதும் வருமினி...|

வங்கியை விட்டும் வெளியே வர  அலறி ஓடின வாகனங்கள்...குளறி ஓடினர் சனங்கள்...அமளி துமளிப்பட்டது நகரம்..  அடித்திழுத்துப் பூட்டப்பட்டன கடைகள்....  மறிக்கப்பட்டன பொலிஸ் தடைகள். விரைந்தன அதிரடிப் படைகள்.. ஏன்...என்ன...? இல்லை விடைகள்...தற்காப்பு தேடி ஓடும் சனங்களில் பொற்காப்பு அணிந்தோடிய பெண் ஒருத்தியை நிறுத்திய போது அவள் சொற்கோர்வையின்றியே சொல்லித் தடைதாண்டி ஓடினாள்..............

~பாலத்தடியில கண்ணிவெடியில..அதிரடியில ஏழுபேர் போல...பெடியளில மூணு பேரு இல்ல....

இன்றைக்குமா...? கமலினி பயத்துடன் ஆக்கிலாவின் கையைப் பற்றினாள்...ஆக்கிலா தைரியத்தைக் கைப்பற்றினாள்..உடன் மறுபடி வங்கியை நோக்கி விரைந்தாள்...நுழைந்தாள்..இனி.....?

                                                                                                                                                      

  ஏழாவது நிறம் சிவப்பு

 

 

 

சிவப்பு உழைப்பின் வனப்பு...செம்பிறையும்ää சிவப்புச் சிலுவையும் சேவை..சிவப்புச் சட்டை பொதுவுடமை..சிவப்புக் கோடு எச்சரிக்கை..சிவப்பு விளக்கு ஆபாசம்.. சிவப்புக் கொடி அபாயம்..சிவப்புக் குருதி உடலுக்குறுதி...வானவில்லின் கடைசி வண்ணம் சிவப்பு..அடிவானம் சிவப்பு..உடலுக்கு வெப்பம் தருவது சிவப்பு.. சிவப்புக்கு ஆயிரம் சிறப்புக்கள்....

காசநோய்ää  நீரிழிவுää காமாலைää சொறி சிரங்குகளுக்கு அருமருந்து சிவப்பு..  .அப்பிள்ää தார்ப்பூசனிää கொய்யாää செந்திராட்சைää என்பன சிவப்பின் பழங்கள்...இவற்றிலுள்ளää  ~லைப்ஸோப்பேன்| உடலுக்குள் நோய்களை வேறாக்கி ஆரோக்கியத்தை நேராக்கிச் சீராக்கித்தரும்..சிவப்புக் கல் மாணிக்கம் இதயத்தைப் பாதுகாக்கும்.. செம்மலர்கள்..செங்குருதி.. செஞ்சிலுவை..செஞ்சீனா.. செம்மீன்..

செவ்வரி..செஞ்சாந்து...செவ்விதழ்கள்.......எல்லாமே செம்மையின் வன்மையான தன்மைகள்.

~சின்னச்சின்ன மூக்குத்தியாம்ää சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்..|என வியந்து இரஸித்தான் மதுரை முத்தையாக் கவிஞன்..    ~செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய்..| எனக் கேட்டுத் தவமிருந்தான்  மருதகாசிப் புலவன்.....

 

பதட்டத்தில் சிவந்து போன ஆக்கிலாவும் ää கமலினியும் சிவப்பு இரத்தம் இழந்து வெளுத்த முகத்தைச் சிவப்புக்கைக்குட்டையால் துடைத்தனர்...வங்கியின் கேட்போர் கூடம் அடைந்தனர்.

~என்ன சனியன் இது........இன்றைக்குமா...?|

~கண்ணே கமலினி...இது என்றைக்குமே.....|

~இப்ப என்னடா செய்வது  ஆர்க்கீ.........?|

~இருந்து பார்ப்போம் வெய்ற் அண்ட் ஸீ...!|

வங்கியுள்ளே  பதுங்கி உள்ளே கிடந்த பெஞ்சுகளில் அமர்ந்தனர். திடீர்ப் பரபரப்பில் வாடிக்கையாளரையும் உள்ளே வைத்து வங்கியை சூடிக்iகாக மூடி விட்டதை வேடிக்கை பார்த்தனர்.  கருமபீடங்கள் முடிவுக்கு வந்தன.. பாதுகாப்புச் சீருடையர்  துப்பாக்கியோடு ஆபத்து வராதென்ற நப்பாசையோடு கதவருகே அனாவஸ்ய தயாரில் விறைத்தார். வெளியே வாகன அலறல்கள் செவி கிழிய........பாலத்துப் பக்கம் வேட்டொலிகள்  கேட்டொலிக்க.....மாலைää நேரம் மெல்ல மெல்ல ஆறு மணி ஓரம்   செல்லச் செல்ல  வேட்டொலிகள் குறைந்தன..பின்னொரு சரவெடியாய் முழங்கிய அவசர வெடியுடன் வெடியொலிகள் ஓய்ந்தன...அப்பாவிச் சனம் எத்தனையோ செத்தனையோ என எண்ணி  மனங்கள் காய்ந்தன...

மெதுவாக வீதியில் சில மனிதர் நடமாட்டம் தெரிந்தது...பின் ஒரு சில வாகனங்கள்  hந்தன.......கடைகள் திறக்கத் தலைப்பட்டன...தொடர்ந்து யாவும் பரபரப்புடன் இயங்கத் தொடங்கின.....வங்கியின் கதவு திறந்ததும் வாடிக்கையாளர்கள் வெளிச்சிதறி தகவல் பொறுக்கினர்..சந்திகளில் வதந்திகள் வாங்கினர்..

~அஞ்சு பேர்;  உடல்கள் பிஞ்சி பறந்ததாம்.....|

~பிக்கப்புத்  தூளாம்......கெப்டன்கள் ஏழாம்..........|

~ஹொஸ்ப்பிட்டல்ல சவமாம்...பிஸ்டல் குழுவும் வந்ததாம்...|

~ஊர் போக ஓர் பஸ்ஸ_ம் இல்லியாம்.....|

~யார் போக.......?|

~நீர் போக  நான் போக  அவர் போக ஓர் வாகனம் இல்லை...|

வாய்வதந்திகளுடன்ää பேய் அடித்த முகங்களுடன் ஆக்கிலாவும் கமலினியும் செய்வதறியாது யோசித்தனர்.  எதுவும் கதைப்பர் மக்கள்... நம்பக் கூடாது  சிக்கல்...

~ஆர்க்கீ....நமது அடுத்த திட்டம் என்னவோ....?|

~உடுத்த உடையுடன் ஊர் போய்ச் சேருதலே.|

~வாகனம்........?  வருமா....?~

~ஓர் கணம்.....பொறும்மா|

~எப்படிப் போவது....?|

~எப்படியும் போவது...!|

ஆக்கிலா தலைக்குள் யோசித்தாள்...கமலினி மனதுக்குள் பூசித்தாள்...ஆக்கிலாவுக்குச் சட்டெனப் பொறி தட்டினாற் போல் கருத்துரு  (ஐடியா) தட்டியது. சட்டென எழுந்தாள்..

~சிட்டே...டக்கெண்டு வா  டக்கே...|

~வடக்கேயா?|

~இடக்காகப் பேசாதே...|

ஆக்கிலா விருட்டென எழுந்து கமலினியுடன் வங்கி மேல்மாடி ஏறி விரைந்தாள்...நல்ல காலமாக ஐரோப்பியர் சுருட்டொன்று கொளுத்த அதே நேரம் வெளியானார்..

~ஸேர்ப்பிரைஸ்;;;....டிடின்ற் கோ யூ.......கேர்ள்ஸ்;;;?|

~ஹெள  ட்டு கோ  ஸே... நோ வெஹிக்கிள்ஸ்;;;....!|

~ப்ரொப்ளம்;; ஸோல்வ்ட்...|

என்றார். உடன் தொலைபேசினார்  கண்கண்ணாடியை கழற்றினார்..அந்நியரிலும் அந்நியரானார். புன்னகையுடன் பார்த்தார்.. அந்நியோன்யமாகச் சொன்னார்.

~ஓக்கே  கேர்ள்ஸ்...வெஹிக்கிள் ரெடி.. யூ கேன் கோ  நௌ...!|

பட்டாம் பூச்சி விழிகள் படபடக்க ஆக்கிலாவைப் பார்த்தாள் கமலினி.. பூரித்த மகிழ்;சியுடன் வெளியே வந்தனர்.. இரத்தச் சிவப்பு ~டெலிகா| வாகனம் தயாராகி வந்தது...

~ஏறடி என் சிட்டே.....!|

~கூறடி எங்கிட்டே...எப்படி இந்த கருத்துரு ?|

~வேரடி மூளையில் தேடியது.|

~பாரடி எனக்கிது தோணலை..|

~சீரடி வைத்து ஏறடி...|

~கௌட்த ஒகொல்லோ...கொஹெத யண்ட இதிங்...?

சீருடைச் சாரதி விடுக்கென இறங்கி இவர்களை கடுக்கெனப் பார்;த்து சிங்களத்த்pல் சுடுக்கெனக் கேட்டான். ஆக்கிலா அவனை மிடுக்குடன் பார்த்து அவன் திடுக்கிடுமாறு வெடுக்கெனச் சொன்னாள்.

~ஐ அம் த நியூ ரீஜனல் அஸ்ஸி;ஸ்டன்ற் ஒவ் ஜீ.கே. பேங்க்....|

சட்டெனச் சீருடைச் சாரதி மரியாதையுடன் கதவு திற்ந்தான். வாய் மூடினான். பவ்வியமாக அவர்கள் உள்ளேற உதவினான். தானேறி சாரதி ஆசனத்தில் அமர்ந்து குளிராக்கியை இயக்கினான்.  கட்டளைக்காக காத்திருந்தான். சில்லென்று குளிர ஆக்கிலா மெல்லிய குரலில் ஆணையிட்டாள்.

                    ~ப்ளீஸ் கோ கல்முனே ரோட்.......|

உடனே டெலிகா ஊhந்து திரும்பி வேகம் பிடித்தது..விரைந்தது.. முப்பது விநாடியில் பாலத்தடி வந்தது.. இராணுவ முகங்கள் குவிந்திருந்தன...அதிரடி கைகாட்டியது..மறித்தது.. யன்னலில் சிங்கள மீசையில்லா இராணுவமுகாமுக்குரிய முகம்.. விஸாரித்தது...சாரதியின் தாய்மொழி விபரிப்பில் உடனேயே போக அனுமதி கிடைத்தது.... தாமதித்து வரிசையில் காத்துக் கிடந்த எழுபத்தி இரண்டு வாகனங்களையும் இரண்டே விநாடிகளில் கடந்து டெலிகா கல்முனை நெடுஞ்சாலையில் பறந்தது...கல்லடிக் கடலோரக் களப்பு வழியே டெலிகா திரும்பிய போது கமலினி சொன்னாள்.

                    ~ஆக்கீ...மேலே பாரு.......!|

                    ~நோக்கீ...னேனே என்ன  கூறு?|

கமலினி காட்டிய திசையில் ஏழு வர்ணங்களும் பளீரிட பாரிய வில்லென வளைந்து தெரிந்தது ஒரு வானவில். வானவில்..................?

 

 

எட்டாவது வெள்ளை.

 

வானவில்லில் இல்லை வெள்ளை. ஆயின்ää வெள்ளை இல்லாமல் வானவில்லே இல்லை..வெள்ளை தூய்மையானது. வெள்ளை வண்ணங்களின் அன்னை. உண்மையில்ää இன்மைதான் வெண்மையின் தன்மை. வெள்ளை மலர் அர்ச்சிப்புக்குரியது. வெள்ளை உள்ளம் கள்ளம் இல்லாதது.  வெள்ளபை; பால் இனிமையானது.  வெண்புறா சமாதானத்துக்குரியது. வெள்ளைப் பிரம்பு விழியிழந்தோருக்குரியது..

பூண்டு வகைகள் வெள்ளை நிறத்துக்குரியன... வெள்ளைப் பூண்டில் விள்ள முடியா மருத்துவம் உள்ளபடியால்ää சமையல் உள்ளே தனியிடம் உள்ளது.  அள்ள அள்ளக் குறையாத ~ஆர்கினோஸல் பைப்ளவனொய்ட்ஸ்| உயிர்ச்சத்துள்ளதால்ää குருதி உறைதல் இல்லை. மாரடைப்பு இல்லை. வாயுத் தொல்லை இல்லவேயில்லை.

~வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு..வேடிக்கை காட்..|டியதை கவிதையாக்க்pனான் கண்ணதாஸன். ~மேகம் ஒண்ணு வானில் அலைகிறதே வெண்மையிலே.  .வானத்துக்கு வெள்ளையடிக்கிறதா உண்மையிலே....?| என சந்தேகப்பட்டான் கவிவைரமுத்து...

 

டெலிகாவின் வெள்ளைக் கண்ணாடி வழியே மேல் திசையில்  அகன்றுää வளைந்து. விரிந்து தெரிந்த வானவில்லைப் பார்த்தாள் ஆக்கிலா.. தமிழில் வானவில்.... ஆங்கிலத்தில் ரெயின்போ...விஞ்ஞானத்தில் விப்ஜிஓர்.......சிங்களத்தில் தேதுனு....அரபியில் கவ்ஸ_ன்....பிரஞ்சில் டெ பார்ஸோவ்........உலகின் எல்லா மொழிகளிலும் பேசப்படும் வானவில்..

~ஆக்கீ...அழகிய கூர் மூக்கீ..வானவில்லை நோக்கினாயா..?

~வானவில்லுடன் வாழ்கிறேன் கமலீ.....|

~யூனிவர்ஸிற்றியில் உம்மட புனை பெயர் வானவில் அல்லவா..?|

~உண்மை.|

~வானவில் பற்றி தமிழ்சங்கத்தில் ஒரு வசனவில் எழுதினீரே  ஞாபகமிருக்கிறதா..?|

~கொஞ்சமிருக்கும்...|

~நெஞ்சிலிருக்கும் வரையும் சொல்லேன்.. ஊர் வரும் வரைக்கும்...நாவினிக்கும்..காதினிக்கும்..|

சீர் வேகத்தில் டெலிகா விரைந்தது.. ஏஸிக்குளிர் நாசிக்குள்ளேறியது.. ஆக்கிலாவின் தலைமுக்காடு சற்றுத் தளரää அவளது உச்சி வகிட்டு வெண்மை தெரிந்தது.. சுருண்டு தெரிந்தது கருங் கூந்தல்.. உருண்டை  விழி மூடி தானெழுதிய கவிதையை நினைவு கூர்ந்தாள்... கமலினியும் சற்றுச் சாய்ந்து சொகுசாய் அமர்ந்தாள்.. வானவில்லின் பின்னணியில் கமலினி வானரசி போலிருந்தாள்.. ஆக்கிலாவைப் பார்த்தாள்... எப்பேர்ப்பட்ட புத்திசாலிப் பெண்ணிவள்....பின் அவளிடம் கேட்டாள்...

                    ~ஆக்கீ..வானவில் என்றால் என்ன..?

                    ~வானவில்....காலக்கிளி அணிந்த கழுத்து ஆரம்....| -முதலடி சொன்னாள் ஆக்கிலா...

                    ~அடடா...அப்புறம்...?| வியந்து இரஸித்தாள் கமலினி.

                    ~மாலைப் பெண்ணின் மசக்கை மருதாணி.|

                    ~அட|

                    ~வானவில் ää உடுக்கள் சுற்றும் குடை ராட்டினம்...வான ஐயரின் வர்ணப் பூநூல்....|

                    ~ஐயோடா  ஆக்கீ... இன்னும்;;;?|

                    ~வானவில்ää ஆதி எறிந்த பாதி உடைந்த வர்ணப் பம்பரம்..|

                    ~ஓஹ்...!|

                    ~வானவில்...திசைக் கோணமளக்க பரிதி வைத்த பாகைமானி..|

                    ~ஹை....|

                    ~வானவில்ää கண்களுக்கு கதிர்கள் எழுதிய ஏழ்சீர் விருத்தம்|

                    ~அம்மாடியோவ்...|

                    ~வானவில்ää மழைக் காதலனின் மின்னஞ்சல் முகவரி...|

                    ~ஹட.....|

                    ~வானவில் குளிர்காலக் கணவன் அனுப்பிய வெளிநாட்டுக் கடிதம்...|

                    ~ச்சூ...|

                    ~அந்த

                     அதிசய வில்லைக் கொணர்ந்து

                     கைவளையாய் உனக்குத் தர

                     அண்ணார்ந்து பார்த்தேன்

                     காணவில்லை

                     வானவில்லை....|

                    ~ஐயோடாஆக்கீ.அந்தநேரம்எங்கடபேக்கல்ற்றியில இ;ந்தக் கவிதைதான் எங்களின்ர தேசியகீதம்.|

      ~புகழாதே சிட:;டு... இதற்குப் பதில் சொல்...அத்தியாவசிய உத்தியோகம் பற்றியாகி விட்டது.            எப்படியாகும் இனி உன் வாழ்வு...?|

                    ~டிஸிஸன்ஸ் போல் இஸ் நொட் இன்  மை கிரவுண்ட் ஆக்கீ.|

                    ~வ்வாட் எ புவர் ரிப்ளை....ஷிட்...சீச்சி...|

                    ~ஆக்கீ..நீ சொல்..உன் வாழ்வு...என்ன செய்யப் போகிறாய்..?|

                    ~ஒரு வானவில் வாங்கப் போகிறேன் கமலினி..|

                    ~ஓக்கே....வாங்கி...வீடு கட்டப் போகிறாயா....?|

                    ~ஜீக்கே வங்கியில் ஈடு வைக்கப் போகிறேன்...|

கிக்கிலீரென இருவரும் சிரித்தனர்...வெகு காலங்களின் பின்னர் மனம் விட்:டுச் சிரித்த போது தாழையடிச் சந்தி திரும்பியது டெலிகா.. அதே நேரத்தில் பின்னால் வெகு வேகமாக ஒரு அதிரடி ஜீப் இவர்களை விரைந்து நெருங்கியது.. முந்திச் செல்ல அவசரப்பட்டது.  நீ...ட்டொலி எழுப்பியது.. டெலிகா வேகம் குறைக்;க அதிரடிப்படை ஜீப் வலது பக்கமாக முடுகலெடுத்;தது.. முந்திச் சீறியது.. அந்தச் சாரதி  இந்தச் சாரதிக்கு சிநேகிதமாய் தலையசைத்தது தெரிந்தது.. முந்திய அதிரடி ஜீப்  நடு வீதிக்கு வந்து சர்வ சுதந்திரமாகப் பறந்தது....ஆனால்.............? இருபதடி தூரத்திலேயே அதன் விதி முடிந்தது மிகப் பயங்கரமாக...மிகப் பரிதாபமாக.....

நெஞ்சு திடுக்கிடும் பேரிடி ஒன்று கேட்டது...திடீரென விளiயாட்டுப் பொம்மை ஜீப்பு போல பத்தடி உயரே தூக்கி வீசப்பட்ட அதிரடி ஜீப் அதிவேகத்தில்  பின் வந்த இவர்களின் டெலிகாவின் மீது மோதி விசிறியடித்துச் சிதறியது...சட்டென டெலிகா  தன் கட்டுப்பாட்டை இழந்து சாய்வுக் கோணத்தில் அரைபட்டு எரிபொருள் தாங்கி உஷ்ணத்தில் வெடித்துச் சிதற........பேரிடிச் சதத்தத்துடன் இரு வாகனங்களும் தாளையடிச் சந்தியில் ஒரு கும்பமாய் ஜூவாலிட்டு செந்தீயாய் எழுந்தன...எரிந்து விழுந்தன.....விழுந்து சிதறின...சிதறியும் எரிந்தன...

இந்தப் பயங்கரக் கோரத்தையும்ää எரிந்த பயங்கரக் கோலத்தையும் மேலேää வர்ணிக்கப்பட்ட வானவில் மட்டு;ம்ää பார்த்துக் கொண்டிருந்தது தனிமையாக....அதன் வண்ணங்களும் கலைந்து கொண்டிருந்தன வெறும் வெள்ளைக் கனவுகளாக..................

(வானவில்லின் வர்ண ஞாபகங்கள் ஒருபோதும் அழிவதில்லை)

 

kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk