உள்ளடக்கங்கள்
00
வானவில்லே ஒரு கவிதை கேளு
குறுநாவல்
VAANAVILLE ORU KAVITHAI KELZU (Short Novel)
R.M. Nowshath
Published in Eelzanatham weekly in
2005
1st edition in 2023 Oct
ABAAABEELAS – SAINTHAMARUTHU
PREMIUM GRAPHICS – 074 0069 589
28 Pages | RS : 200
ISBN: 978-955-38657-0/0
௦௦௦
என்னுரை
வானவில்லுக்கு எழுதிய
வசனவில்
இலங்கையில் போர்கால மேகங்கள் தீவிரமாக சூழ்ந்திருந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இக்கதை நிகழ்கிறது. பல்கலைக்
கழகத்தில் பட்டம் பெற்று வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகளாக
இருந்த அடுத்தடுத்த
ஊர்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் இனத் தோழிகளான இருவர் வாழ்வில் நிகழ்ந்த கொடூரமான
ஒரு நிகழ்வு பாதி கற்பனையாகவும், . பாதி நிஜமாகவும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
வானவில்லை வளைத்து வீடு கட்ட
விழைந்தவர்களின் வாழ்வில் விதி
வந்து விளையாடிய (வி)சித்திரம் இது.
2003 ஆம் ஆண்டில் வானவில்லே ஒரு கவிதை கேளு என்ற இந்த புதினத்தை
நான் எழுதி முடித்திருந்தேன். எனினும் இது, 2005 இல், நண்பரும், என் எழுத்துக்களின்
தீவிர வாசகருமான
பிரதம அஞ்சல் அதிபர் திரு. யூ.எல்.எம். பைசர் அவர்களின் முயற்சியின் பேரில், மட்டக்களப்பிலிருந்து
வெளியான ‘ஈழநாதம்’ வாராந்தரியில்
தொடர் நவீனமாக வரும் ஒரு நவீன தொடர் என்ற
உப மகுடத்துடன் எட்டு வாரங்கள்
தொடர்ச்சியாகப் பிரசுரமானது.
இத்தொடரை
என் வழமையான எழுத்து நடையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக
கொஞ்சம் கவிதை போலவும்,
கொஞ்சம் உரைநடை போலவும், எழுதி வந்தேன். இது மிகவும் வரவேற்புப் பெர்ரஹு என்பது, இதற்காக வந்த வாசகர் கடிதங்களிலிருந்து தெரிய
வந்தது. எனக்கு நல்ல உற்சாகமாகவும்
இருந்தது.
இதன் மூலம் வேறு பல பரிமாணங்கள், மாற்றம் என இலக்கியச்சிந்தனைகள் காரணமாக இதை படிப்பது நமக்கே ஒரு புதிய அனுபவமாக அமையும். அதிலும் 18 வருடங்களுக்கு பின், 2023 இல் திருத்தங்களுடன் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் படைப்பாளியின் எழுத்து வளர்ச்சியையும் காண முடிகிறது.
இதன் பிறகு வேறு பல பராக்குகள், மற்றும் என் இலக்கியச் சோம்பல் காரணமாக இது பத்திரிக்கை நறுக்காக என் கோவையில் பல வருஷம் தூங்கிக் கிடந்தது. எனினும் 1௮ வருடங்களின் பின் 2 ௦ 2 3 இல், தற்செயலாக என் பழைய கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ஈழநாதம் பத்திரிக்கை நறுக்குகள் கண்ணில் பட்டன.. அப்போதுதான் இதனை ஒரு சிறு கைப்பிரசுரமாக வெளியிட்டால் என்ன என்ற ஒரு யோசனை பளிச்சிட்டது. அதன் விளைவுதான்
இந்தக் கையடக்கப் பதிப்பு.
இது
பழைய ஆக்கம் என்பதால், பல்வேறு தகவல்
பிழைகள், இலக்கணத் தவறுகள், இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உண்டு. எனினும் அவற்றைப் பொறுத்தருள வேண்டி வாசகர்களுக்கு ஒரு வானவில் பரிசாக அன்பளிப்புச் செய்கிறேன். ஏற்றுக்கொள்க.
இதனை பிரசுரித்த
ஈழநாதம் பத்திரிகைக்கும் அதற்கு உதவிய
நண்பர் யூ.எல்.எம். பைசர்
பிரதம அஞ்சல் அதிபர்
அவர்களுக்கும், அழகுற அச்சிட்டுத்
தந்த பிரிமியம் கிராபிக்ஸ்
தம்பி சஹீர்
அவர்களுக்கும், என் மனமார்ந்த
நன்றிகள். இதனை என் அருமையான
மனைவிக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.
ஆர். எம். நவ்ஷாத்
30.11.2023
Blogspot-theeran1959.com
Facebook – R.M. Nowsaath
Email – rmnawshad@gmail.com
Phone & whatsapp – 0774781250
இந்நூலாசிரியரின்
ஏனைய நூல்கள்
தூது
(கவி ஏடு) -1983
வல்லமை
தாராயோ (சிறுகதைத் தொகுதி) -2000
ஆழித்தாயே
அழித்தாயே (கடற்கோள் காவியம்) -2017
நட்டுமை
(நாவல்)-2009
வெள்ளிவிரல்
(சிறுகதைத் தொகுதி)-2011
கொல்வதெழுதுதல்.90
(நாவல்) -2013
அபாயா
என் கறுப்பு வானம் – மின்னூல் (கவிதைகள்)-2015
குறுநெல்
(குறும்பாக்கள்)-2017
தீரதம்
(சிறுகதைத் தொகுதி)-2017
வக்காத்துக்குளம்
(நாவல்)-2021
முத்திரையிடப்பட்ட
மது (கவிதை)-2021
ஆமீன்
(நெடுங்கதை)-2023
வானவில்லே
ஒரு கவிதை கேளு.. (குறுநவீனம்)- 2023
No comments:
Post a Comment