நான்காவது நிறம் பச்சை
பச்சை- இச்சையைக் குறிக்கும். பச்சை வண்ணம் இச்சிக்கும் குணம். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. கிட்டத்துப் பச்சை மண்ணுக்கு மலர்ச்சி. பச்சையம் உயிர்களை வாழ்விக்கிறது. பச்சைக் கிளி என்றும் ஆசைக்குரியது. பச்சைவடம் மதிப்புக்குரியது. பச்சைப் பொய் வெறுப்புக்குரியது. பச்சைச் சிரிப்பு ஆபாசமானது. பச்சை விளக்கு அனுமதிக்குரியது. பச்சைக் குழந்தை கபடமில்லாதது. பச்சையரிசிப் பல் பரவசம். பச்சை மாணிக்கம் பார்த்தால் பார்வைக் கூர்மை ஓர்மை பெறும் என்பர்.
பச்சை மரக்கறிää கீரைää என்பன பச்சைக்குரிய இச்சை உணவுகள். ~லூட்டின்|ää ~ஜியாக்களான்ரின்|ää என்னும் பச்சை உயிர்ச்சத்துக்கள் மாரடைப்பை நிச்சயம் தடுக்கும். இச்சா சக்தி உச்சம் மீகும். சிற்பப் பெண்களின் கற்பக் கோளாறுகள் நீங்கும்.
~பச்சை நிறமே..பச்சை நிறமே.. இச்சை கொண்ட பச்சை நிறமே....|என்று வியந்தான். வைரமுத்தன். ~பச்சைக் கிளி...முத்துச்சரம்..முல்லைக் கொடி யாரோ...| என்று தடுமாறினான் புலமைப் பித்தன். ஆயினும் ஆக்கிலாவுக்கும்ää கமலினிக்கும் இப்போது பச்சையை இரஸிக்கும் இச்சை இல்லை.
பச்சைநிற ஜீப் வண்டிகள் இரண்டு வெருண்டு விர்ர்ரென்று சீறி நின்றன. அழுக்குப் பச்சை சீருடையோர் ~பச்சக்ää பச்சக்|கென்று குதித்திறங்கினர். பச்சைச் சிங்களத்தில் உத்தரவுகள் இட்டனர். பரபரவென்று பச்சை மரங்கள் நோக்கி ஓடி நிலையெடுத்துப் பதுங்கினர். பொதுமக்கள் முகங்கள்; பச்சடித்துää குரல் பொச்சடித்து விறைத்தன. ஆக்கிலாவும்ää கமலினியும் இருகரம் பற்றி ஒருமரம் பற்றி ஒடுங்கினர். பச்சைச்சீருடைச் சிங்களக் கோப்ரல் பெரிய குரலில்ää
~எங்கட சிங்கள ஆமி எட்டு ஆக்கல் அற்றாக் வளின் செத்தது. எல்ற்றிற்றி வெட துந்நா. ;எத்தக்கொட்ட நாங்க செக் பண்றது.|
என்றான் பச்சைச் சிங்களமும் ää கொச்சைத் தமிழும் கலந்து. சுற்றி நின்றோர் வரிசைப்;படுத்தப்பட்டனர். இம்சைப்படுத்தப்பட்டனர்.. நெரிசல்படுத்தப்பட்டனர்... ஆளடையாள அட்டைகளை ஒப்புவித்தனர். ஆக்கிலாவும்ää கமலினியும் வரிசையில் வேறாக நின்றனர். லான்ஸ் கோப்ரல் அவர்களைத் தனியாக நெருங்கினான். எச்சில் விழுங்கினான். மிக அருகில் அவனது சவரம் செய்த முகத்தில் பச்சைத் தடம் தெரிந்தது. கமலினி ஆக்கிலாவின் தோள்களைப் பிடித்து பயத்தில் பாதி மறைந்தாள்.
~ஓகொல்லோ கவ்த...?|
~அபி...யூனிவேர்ஸிற்றி ஸ்டுடன்ற்ஸ்....|
~யுனிவேர்ஸிற்றி.......?|
~விஸ்வ வித்தியாலய...யாப்பனய.|
~ஐடென்டி தியனவா...?|
~ம்...ஏய் கமலினிää எடன்டி உன் ஐடென்டி.|
பெட்டைகள்கொடுத்தஅட்டைகளைப் பெட்டைகளைப்பார்த்தபடியே புரட்டிப் புரட்டிப் பார்த்தான் கோப்ரல்.
~ம்..? ஓ....யாப்பன விஸ்வவித்யாலயத..? எஹெனம் கொட்டித்தெக்க டிக்கக் சம்பந்தய்...ஒய ---ஊடாப்பாத்துவää மெயா கார்தீவ்......கோமத மெ........?|
~இன்ற்றவியூ ஒண்டுக்கு வந்தம் நாங்க........|
~ஒயா முஸ்லிம்.....மெயா தெமள......?| கண்டுபிடித்தான் கோப்ரல். பின் முரண்டு பிடித்தான்.
~ஒயா ஸிங்கள...........| சொண்டடித்தாள் ஆக்கிலா.
~மொனவத கிவ்வே......?|
லான்ஸ் கோப்ரல் கோபமுற்று மற்ற ஜீப்;புக்கு (சை) கை காட்ட ஒரு அதிரடிப் பெண் பச்சை சீருடையுடன் பாய்ந்திறங்கி வந்தாள். கோப்ரல் கண் காட்ட அதிரடியாள் துடிதுடிப்பாய் இவர்களை நெருங்கினாள். கமலினி நடுநடுங்க.. ஆக்கிலா சிடுசிடுத்தாள். அதிரடியாள் இருரையும் ஒரு பஸ்ஸின் மறைவுக்கு அழைத்தாள். சென்றார்கள். அதிரடியாள் மென்மைக் குரலில் வண்மையாக ஆணையிட்டாள்.
~களவண்ட ஒக்கோம.....|
~என்னது......?|
~எல்லாத்தையும் கழட்டச் சொள்றாள்...|
~எதுக்கு.......?|
~களவன்னங்கோ..இக்மனின்|
~பார்க்கனுமாம்...|
~இக்மங் கரண்ட.....|
துப்பாக்கியைக் கழற்றினாள். அவர்களை ஆடைகளைக் களைய அவசரப்படுத்தினாள். ஆக்கிலா சற்று நிதானப்பட்டு சிறிய பயப் புன்னகையுடன் அதிரடியாளை நோக்கினாள். கண்களில் சிறிது நீரைத் தேக்கினாள். கொஞ்சம் விக்கினாள்.. சிங்களத்தில் திக்கினாள்.
~மெ.. எஸ்ரிஎப் நோனாää அபி கொட்டி நெவே..விஸ்வவித்தியாலய ஸிஸ்யோ..!|
~விஸ்வ வித்தியாலய...........?|
~ஒவ். நோனா..அப்பி ஆவே சம்முவ பரீக்ஷனயக்கெட்ட|
அதிரடியாள் முகத்தி;ல் சற்றுக் கடுமை குறைந்தது. மெல்லிய புன்னகை பிறந்தது. பயம் மறைந்தது.
~ஹரி..ஹரி யண்ட..| என்றாள். கூர்மையாய்ப் பார்த்தபோது சற்றே அழகாக இருந்ததாகவும் தோன்றியது. நிம்மதிப் பெரு மூச்சுடன் முன்னால் வந்தனர்.
~இவரய் இதிங் சார்ஜன் ஸேர்...| என்றாள்.
லான்ஸ் கோப்ரல் அடையாள அட்டைகளைக் கொடுத்தான். போக அனுமதித்தான். பஸ்நிலையம் விட:;டு வெளியே வந்தனர். வாகனமேதுமின்றி சாலை வெறிச்சோடியிருந்தது. தூரத்தே துப்பாக்கி வெடிச்சத்தங்கள்... பதிலடிகள்..... ஆக்கிலாவும் கமலினியும் தைரியம் கடன் வாங்கி விரைவாக நடந்து அவசரமாக எதிர்ப்பட்ட ஒரு சந்துக்குள் நுழைந்தனர். வீடுகள் வரிசையாகத் தெரிந்தன. சட்டென்று ஒரு கதவைத் திறந்துட் புகுந்தனர்.
கட்டிக்கிடந்த கறுப்புக் குதிரை போலிருந்த ஒரு நாய் இவர்களை உடனடி விரோதியாகப் பாவித்து ~ளொள்..ழோhள்..| என்றது. கமலினி நாய்க்குப் பயந்து ஆக்கிலாவின் கைகளைப் பிடித்தாள். உள்ளிருந்து ஒரு மாமி வெளிவந்து நாயைப் பார்த்துää ~டாக்கீ...ளொள்.....| என்றாள். உடன் குதிரை நாய் அடங்கி எலி நாய் ஆகிச் சுருண்டது. ஆக்கிலாவின் ~பர்தா|வும்ää கமலினியின் நெற்றிப் பொட்டும்ää இணைந்து வந்த விநோதத்தைக் கண்டு திடுக்கிட்டுää பின் மினக்கெட்டு தானே ஒரு முடிவெடுத்து இவர்களிடம் அடியெடுத்து வைத்துக் குரலெடுத்து மாமி-
~ஆரப்பா நீங்கள்? கலை நிகழ்ச்சிக்கு வாங்கிட்டமே நாங்கள்..டிக்கட்..|
~வெளி ஊரப்பா நாங்கள்..விற்க வரயில்ல டிக்கட்.....|
~அப்போ..கிறிஸ்டியன்ஸ் புக்கா...நாங்க சைவம்..|
~அப்போ...ய்...அதெல்லாம் இல்ல...நாங்க பாவம்..|
~என்ஜீஓ ஆக்களா..அகதிகளுக்கு நேத்து குடுத்திட்டமே பட்டு வேட்டிää கொட்டுக் காற்சட்டைää எட்டு நைற்றிää கட்டுச் சல்வார்.........|
~வெட்டு கதையை..ஷட்அப்..மாமி..|
ஆக்கிலா சிலிர்த்துச் சிறியதும்ää கமலினி மாமியை பலவந்தமாக உள்ளே தள்ளிää
~மாமீ...வெளிய ரவுண்டப் நடக்குது.. நாங்க யுனிவர்ஸிற்றிப் பெட்டைகள்....|
~ஹையோ......என்னது எல்றிற்றிப் பெட்டைகளா...? |
~ஐயோ..........யுனிவர்ஸிற்றி...மாமி...பல்கலைக்கழகம்...| கத்தினாள் ஆக்கிலா..வெட்கினாள் மாமி.
~ஓஹ்.....ஏன் வந்தனீங்க......சாமி..சாமி...?|
~ஆஹ்...வெளிய ரவுண்டப்...மாமி...மாமி..|
~அதுக்கு.........ஆரைக் கண்டு...........?|
~இதுக்குள் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாமிண்டு...........|
இதற்கிடையில் மாமியின் மாமாவும்ää மாமாவின் அம்மாவும்ää அம்மாவின் அக்காவும்ää சூழ்ந்தனர். மாமி தன் வெட்கத்தை கக்கத்தில் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு-
~இவங்க யுனிவர்ஸிற்றி கேர்ள்ஸாம்.. இத முதல்லயே சொல்லியிருக்கலாமே.....?|
~நாங்க யுனிவரிஸற்றி கேர்ள்ஸ்தான்.. இத முதல்லயே சொல்ல விட்டால்த்தானே......|
~இருங்க இப்படி...ரீ குடிங்க...|
~சரிங்க...|
உட்கார்ந்தனர். டோக்கீ ~ள்ள்ள்ள்ள........| என்று சோம்பல் முறித்தது. கமலினி சிரிப்புடன் ஆக்கிலாவைப் பார்த்து-
~ஆக்கீ.........நாய்க்கி பெயர் கேட்டாயா...? டோக்கீ...!|
~தூக்கீ எறிவேன் தாக்கி..|
டைம்கீ ஒன்று இருபது என்று காட்டியது. மாமி முழுமுழுக் கிளாஸில் இளம் பச்சைக் குளிர்பாணம் கொணர்ந்தாள். இவர்கள் தாகமாகவிருப்பதாக உணர்ந்தாள்.
~குடிங்க..எவடம் நீங்க....பிள்ள நீர் முஸ்லிமா.. நீர் சைவமா வேதமா? |
~நான் ஊதாப்பத்து.|
~நான் ஊதும் பத்து.|
~நான் ஊதணும் அடுப்பு..நீங்க இருங்க..கொஞ்சப் போதில் கிளிரயராகிடும்.. போகலாம் நீங்க...|
மாமியின் தேறுதல்..மனதில் ஆறுதல்.. வாகனம் காலை வாருதல் ஆனால்ääää ஊர் போய்ச் சேருதல்...? வேறு நல் வழியின்றி இருவரும் ஒருமணித்துளி கருமணிவிழி பூக்கக் காத்திருந்தனர்.. ரவுண்டப் முடியப் பார்த்;திருந்தனர். மாமாவின் குறுவிழித் துளைப்பைப் பொருட்படுத்தாதிருந்தனர். டோக்கியின் பார்வையைச் சகிக்காதிருந்தனர்....திடீரென ஆக்கிலா கேட்டாள்...
~சிட்டே..உன்னிடம் என்ன கேட்டனர் இன்ற்றவியூவில்...?|
~அடடே..சொல்ல மறந்தேன்..முதல் கேள்வி..பூமியின் மையப் புள்ளி எது?|
~என்ன சொன்னாய்?|
~பூமியின் விட்டத்தின் அரைப்புள்ளி குறிக்குமிடம் என்றேன்....|
~ஹட.....அடுத்த கேள்வி?|
~ஐந்து கதிரைகள் மூன்றில் நாங்கள் ஒன்றில் நீங்கள்.. மற்றது யாருக்காக...?|
~என்ன சொன்னாய்..|
~உலக வங்கிப் பிரதிநிதிக்காக...|
~ ~ச்சா..மூன்றாம் கேள்வி..?|
~சிக்கலான ஒரு கணக்கு. ஆனால்ää விடை ரோபோவில் இருந்தது...|
~நம்பிக்கை உண்டா உனக்கு?|
~ஆக்கிக்குக் கிடைக்காவிட்டால் எனக்குக் கிடைக்கும்...|
~உன்னிடம் என்ன கேட்டனர்...?|
~உன்னிடம் என்ன கேட்டனரோ அப்படியே...|
சட்டென மாமி ஓடி வந்தாள். டோக்கீ ~ளொள்வ.வ.வ.| என்றது.
~பெட்டையள்..வெளில ரவுண்டப் முடிஞ்சுது.. வாகனம் போகுது..|
~தேங்க்யு மாமீ|
~வெரி தாங்க்ஸ் டோக்கீ...போகலாமா ஆக்கீ........?
~கிட்டுமா வாகனம் நமக்கினி..?|
~எட்டி நட என் சிட்டுக் கமலினி...|
வீதியில் இறங்கினர்.. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சனங்கள்..வாகனங்கள்..சைக்கிள்கள்..பாதி மூடிய கடைகள் மீதி திறந்தன..பிரதான சாலைக்கு வந்தனர். தூரத்தே வீதி ஓரத்தே.. கல்முனை பஸ்.....
~ஓடடி.......! மினிபஸ்ஸடி...|
~ஓடாட்டி.....? இனி மிஸ்ஸடி..|
ஓடிச் சென்றனர். பாடி வந்த மினிபஸ் இவர்களை நாடி ஏற்றிக் கல்முனை சாலை தேடி ஓடியது...
(மஞ்சள் தொடரும்....)