Tuesday, July 7, 2015

ஐந்தாவது நிறம் மஞ்சள்.

ஐந்தாவது நிறம் மஞ்சள்.

மஞ்சள் மங்களகரமானது. மஞ்சள் பூசி மஞ்சம் கொண்டால்ää மகிழ்வு கூடும் என்பர். அந்திககுப் பிந்தியää இருட்டுக்குச் சற்று முந்திய மஞ்சள் வானம் வெகு அழகு. மஞ்சள் கயிறு பாதுகாப்புக்குரியது. மஞ்சள் கோடு அவதானத்துக்குரியது. மஞ்சள் பத்திரிகை ஆபாசமானது. மஞ்சள் நீராட்டு மலர்வுக்குரியது. மஞ்சள் பட்டை மருத்தவக் குணமுடையது. மஞ்சட் பொட்டு மகத்துவமானது. மஞ்சட் காமாலை அபாயமானது.

மஞ்சள் நிறத்துக்குரிய பழங்களாக வாழைப்பழம்ää தாவுள்ää மாää கனித்தோடை தக்காளி என்பன உண்பன. மஞ்சட் பழங்கள் தொழுநோயால் இழுபடுவதைக் குறைக்கும். மலச்சிக்கல்ää பித்த ரோகங்கள்ää கண்குறைபாடுகள் ஆகியவற்றைத் தணிக்கும்.


~சூரிய மஞ்சளை எடுத்து அந்தி வானத்து அம்மியில் அரைத்து......| அழகு பார்த்தான் கவிப் பேரரசன். ~மஞ்சள் முகமே வருக.. மங்கள விளக்கே வருக.....| என வரவேற்றான். கவியரசன்.


மஞ்சள் வண்ண ~ஹிஜாபி~ல்ää கடுமஞ்சள் நூலால் பூ வேலைப்பாடு நெய்து கொண்டிருந்தாள். ஆக்கிலா.

~கொஞ்சம் கோப்பி இருந்தா தா புள்ள...| என்றாள் மஞ்சட்காய்ச்சல் உம்மா.

~அஞ்சாறு கிளமையாயிட்டு வேங்கு இணடவிய் போய். ஓண்டுக்கும் பதிலில்லை...| என்ற வாப்பா தனது ஊத்தை மஞ்சட் தொப்பியை அணிந்த கொண்டே பள்ளிக்குப் பறப்பட்டார்.
~பொட்டய அதிகமா படிக்கவெய்க்க வேண்டாமெண்டன்.. கேட்டாத்தானே...|
~அட்டையப் போல சுருளாம வாய மூடு. பொட்டைக்கென்ன...பட்டதாரி அவள்.........|
~பட்டதாரியாக்கிட்டு நான் வெட்டதாரிதாரியாகிப் பாய்படுக்;கைதாரியாகியதுதான் மிச்சம்...|
~பட்டதாரிக்கு உத்தியோகம் கட்டாயம் குடுக்கணும்...சட்டம்...|
~என்ன சட்டமோ....அவளுக்கு மாப்பிள்ள எடுக்கிற கட்டம்..இருக்கா ஊடுகீடு கட்டுற திட்டம்..?|
~நொட்ட ஆரம்பிக்காம கட்டயைச் சாத்து.. புள்ளே..எனக்கும் கோப்பி...தாடா..|
~விட்ட விடிய ரெண்டுபேரும் கிட்டத் தொடங்கியாச்சா....?|



வட்டத் தட்டில் மூன்று கோப்பி கொண்டு வந்த அக்கிலா அவைகளைப் பகிர்ந்தளித்த போது வெளியே மஞ்சள் தகட்டுப் படலையில் தட்டும் ஒலியைத் தொடர்ந்து அழுக்கு மஞ்சள் சீருடைத் தந்தித் தூதுவன் உள்வந்தான்.




~பிள்ள ஆக்கிலா முக்தாரு...எக்ஸ்பிரஸ் லெட்டர்...நல்ல மேட்டர்...|

~கொடு..கொடு..கொடு..என்கிட்ட..| பதறினார் வாப்பா.
~விடு..விடு..விடு..| என்ற சேவகன் திடு திடுவென உள்நுழைந்து ஆக்கிலாவிடம் கையெழுத்துப் பெற்றுக் கொடுக்க- குடு..குடு..வென்று ஆக்கிலாவிடம் ஓடினார் வாப்பா.



~பிரி..பிரி..பிரி..பார்|




படபட நெஞ்சுடன் ஆக்கிலா தைரியம் சேர்த்தாள். உறையைப் பிரித்தாள்.;..உள்ளிருந்தது ஒரு தாள். விரித்தாள். வாசித்தாள்.. சிறிது யோசித்தாள்... பின் புன்னகைத்தாள்...வாப்பாவைப் பார்த்தாள்..வேர்த்தாள்...மகிழ்ச்சியில் ஆர்த்தாள்...




ளுநுடுநுஊவுநுனு ஐN குஐசுளுவு சுயுNமு. யுNனு லுழுரு யுசுநு யுPPழுஐNவுநுனு வுழு வுர்நு Pழுளுவு ழுகு யுளுளுஐளுவுயுNவு சுநுஐபுஐழுNயுடு ஆயுNயுபுநுசு யுவு பு.மு.ஐ. டீயுNமு றுஐவுர் நுகுகுநுஊவு குசுழுஆ...................




மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன ஓரு மாயப் பிரமையாய்... ஆக்கிலா காற்றில் மிதந்தாள் ஒரு கனவுத் தேவதையாய்....மஞ்சள் பூங்கொத்துகள் ஆடின...மேகங்கள் ஓடி வந்து பாதங்கள் தாங்கின...நாதங்கள் ஒலித்தன.....




~வாப்பா..எப்பொய்ன்ட்மென்ட் லெட்டர்..வேலை கெடைச்சுட்டுது..|

~அல்ஹம்துலில்லாஹ்.....|



குதியிழந்த காலை மறந்து ததிபுதிப் பட்டு அதி மகிழ்ச்சியில் குதியெனக் குதித்து மிதித்துத் தடுமாறி தரையில் விழுந்து பதிந்தார் வாப்பா.. நோய் மறந்து தாவியெழுந்து தாய் ஆக்கிலா மீது பேய் போல விழுந்தாள்....நெஞ்சம் நிறைந்து வாய் விட:;டுச்சிரித்தாள்...




~வாப்பா காரைதீவுக் கமலினிக்கு ஒரு ~கோழ்| எடுத்திட்டு வாரேன்....| தொலைபேசி இருந்த வீட்டுக்கு ஓடினாள்.. ஒலிவாங்கியை நாடினாள்.. இலக்கங்களைத் தேடினாள்.. சுழற்றினாள்.




~ஹெலோ..பக்கத்து வீட்டுக் கமலினியை அழைக்க முடியுமா..ப்ளீஸ்;;.? நான் ஆக்கிலா...|




பரபரப்பான சில விநாடிகள் காத்திருந்த போதினிலே காதுகளில் சிட்டுக் கமலினியின் குரல் தேனாய் வந்து உற்சாகமாய்ப் பாய்ந்தது காதினிலே...




~ஹெல்லோ ஆர்க்கீஈஈஈஈ|

~சிட்டூ..லெட்டர் ஏதும் கிட்டியதோ சிட்டுஊஊ?|
~டு;ட்டூ! சற்று முந்தி தந்தி வந்தி ருந்தது..~எப்பொய்ன்ட்மென்ட்|தான்..எப்படிச் சொல்ல என் மகிழ்ச்சியை..உடனே ஜீ.கே. வங்கிக்கு ~கோழ்|; எடுத்துக் ~கென்பர்ம்| பண்ணிட்டன். அப்படியே உனக்கு ~கோழ்| எடுக்க வெளிக்கிட்டபோதுதான் நீயே எடுத்திட்டாய்......பதினெட்டுப் பேரில் மூன்று பேருக்குத்தான் ~எப்பொய்ன்ட்மென்ற்..| நானொன்டு....நீயொன்டு....|
~இன்னொண்டு.....?|
~என்னண்டு சொல்ல...? விதூஷிஹாவுக்கு அண்ணனெண்டு சொல்லிய அந்தக் கண்ணொண்டு சின்னொன்டாய்; வந்தானே ராமகிருஸ்ணனெண்டு....அவனொண்டு...|
~அட...மண்டு...எல்லாம் சரி ...என்னண்டு போறது...எப்ப..?
~நாளையன்டைக்கு வரணுமெண்டு சொன்னாங்க...வேனொண்டு புக் பண்ணுவம்ண்டு...|
~வேனொண்டா...? .வேணாம்டா....காசெண்டு கேட்பானே ஆயிரம் ரெண்டு...மண்டு...!
~அப்படியெண்டால்.......?|
~எப்படியெண்டாலும்ää நீ நாளையண்டைக்கு எட்டு மணிக்கெல்லாம் பத்தினிக் கோயில்பதிக் ஹோல்ற்றில் நில்லு. உனக்கொன்று எனக்கொன்றாய் ~ஸீற்| ~ரிஸர்வ்| பண்ணி நான் வருவேன் கொண்டு...கண்ணு.....வேறென்ன சொல்லு.........?|
~ஆ யூ ஸ{வேர்?|
~யெஸ் டியர்..|
~ஸோ வாட்...இன்னொண்டு சொல்ல மறந்தேன்... நமக்கு ட்ரைனிங் எங்க தெரியுமா...?|
~தெரியாது.|
~ஜீ.கே இன்டர்நஷனல் பேங்க் ஷங்காய் சி;ற்றி பிராஞ்....|
~இது எங்காய் இருக்கிறது தங்காய்...? ஷங்காய்...?|
~ஆக்கிலா நங்காய்.....ஷங்காய் இஸ் எ ஸெகண்ட் கெப்பிற்றல் ஒவ் சிங்காய்.......|
~வாட்;;.......?|
~சிங்கப்பூர்..|
~ஓஓஓஓ...தாங்க் கோட்...|
~டெலிபோன் கட். நேரில் மீட்...!|



‘’’




ஆக்கிலாவுக்கு சிங்கப்பூர் வங்கியில் மனேஜர் என்று ஊரெங்கும் யாரென்றும் பாராது பாரெங்கும் நீக்கமற செய்தி பரப்பியிருந்தார் வாப்பா.. உம்மா மஞ்சட் பற்கள் துலக்கி மகளிர் அணித் தலைவியாகி தெம்புடன் முரசறைந்திருந்தாள்...






இரண்டு நீண்ட நாட்கள் போக மறுத்தன... தாமதித்தன... ஆக்கிலாவின் வேல் விழிகள் தூக்கமிலாது நீள் விழிகளாயின... வாசலெங்கும் நட்சத்திர விதைகள் நாட்டினாள்..அவற்றுக்குää சொர்க்கத்தில் பன்னீர் கடன் வாங்கி வந்து வார்த்தாள்... நட்சத்திர மலர்கள் கலர்கலராய் வாசலெங்கும் பூத்தன... வாசமெங்கும் பரவின.....ஆக்கிலாவின் கனவுத் தேசமெங்கும் தேவதைகள் வந்து சேவைகள் செய்தன... ஆக்கிலா இளவரசி பசியாற நிலவரசி வந்து நிலவரிசி சமைத்து ஊட்டிவிட ஒளிவரிசையில் நின்றாள்...கடவுளின் சிரிப்பில் புது அர்த்தம் இருந்தது..... கனவு முடிந்தது. காலை விடிந்தது.........துயிலெழுந்தாள்...இன்று...........?








(செம்மஞ்சள் தொடரும்.......)

No comments:

Post a Comment