இரண்டாவது நிறம் கருநீலம்.
இரவின் நிறம் கருநீலம். கருமையில்ää நீலக் கரும் மயில்ää நீலக்கருமை விரிக்கும் பெருமை சிரிக்கும் அருமைக் கானகக் கருமையும் கருநீலம். கருநீலம் வானவில்லில் ஒரு நீலம். கருநீல ஆலமுண்டவனை திருநீலகண்டனெனக் கொண்டனர் இந்துக்கள். கருநிறக் கண்ணுருக் கொண்டவனைக் கருநீலக் கண்ணனெனக் கருதினர் அவர் தம் பந்துக்கள்.
ஆழக்கடல் கருநீலம். மேலக்கடல் ஒரு நீலம். நுரை நீளும் கருமேக வானம் கருநீலக் கோலம். கருவிழிகள் கொண்டு கருநீலக் கல்லொளி கண்டால் கண்கெடும் ஞாலம். கறுப்பில் நீலத்தை வெறுப்பில் கலந்ததைக் கருநீலம் என்பர்.
கருநீலப் பெயர்ப்பலகையில் ~ஜீ.கே. இன்டநஷனல் பேங்க் லிமிற்றட்| என்று மும்மொழிகளிலும் பெயர்த் தலைப்பாகை கட்டிய சர்வதேச வங்கி மூன்று மாடிக் கருநீலக்கட்டிடத்தி;ல் தலை நிமிர்ந்து நின்றது.
உள்ளே கேட்போர் கூடத்தில் கிட்டக்கிட்ட வட்டமாக மட்டுப்படுத்தப்பட்ட முப்பத்துமூன்று பட்டதாரிகள் வட்டமாக கொட்டக் கொட்ட விழித்தபடி உட்கார்நதிருந்தனர். தம்முறை வருமட்டும் அடக்கியிருந்தனர் தம் கொட்டத்தை. அளந்து கொண்டிருந்தனர் வங்கி விட்டத்தை.
ஆக்கிலாவின் இலக்கம் பதினாறு. மணி காட்டியது பதினொன்று பதினாறு. பதினைந்தாம் இலக்க கமலினிச் சிட்டு உள்ளே போய் நிமிடங்கள் பதினாறு. சட்டென்று கதவுகளைத் தள்ளிக் கொண்டு சிட்டுக் கமலினி விட்டு வெளியே வந்தாள். சுட்டுவிரலை ஆக்கிலாவை நோக்கி உயர்த்திக் காட்டினாள். சீருடைச் சேவகன் அழைத்தான்.
~நெக்ஸ்ற்..ஸிக்ஸ்ற்றீன்....மிஸ்.ஆக்கிலா முஹமட் முக்தார்.|?
காதில் பாய்ந்தது தேனாறு. வயிற்றில் பாலாறு. எழுந்தாள் சிற்றாறு. நடந்தாள் ஒருவாறு. நடக்கையில்ää அறையைக் கடக்கையில் கமலினியைப் பார்த்தாள் பலவாறு. வேலை கிடைத்தால் வரலாறு. சும்மா அல்ல களிநடமாடும்ää வெளிநாடு பின்புலத்தில் இயங்கும் ~ஜீ.கே இன்டர்நெஷனல்| வங்கிக்கான பிராந்தியங்களின் உதவி முகாமையாளர் பதவி. இருபதினாறு ஆயிரம் சம்பளம். போனஸாக மூவாயிரம் கிம்பளம். மதிப்பேறும் அம்பலம். தங்கத் தாம்பாளம்.. ஜரிகை ஜமுக்காளம்.. ஏராளம்.. கனவுலகம் தாராளம்...
உள்ளே நுழைய முன் சிறிது தாமதித்தாள். எல்லாவற்றையும் கவனிப்பார்கள்.. சுட்டி விரல் மடக்கினாள். தட்டிக் கதவைச் சொடுக்கினாள்.
~மெ ஐ கம் ஈன் ஸே...?| என்றாள்.
~ப்ளீஸ்.. கம் ..| உள்ளே அழைத்தது ஒரு குரல்.
ஓரு கணம் தாமதித்தாள். பின் உட்சென்றாள். உள்ளே- கருநீலத்தில் பளபள மேஜை. கருநீல மலர்க் கொத்தில் விரிப்பு. மலர்களின் சிரிப்பு.. ஐந்து கதிரைகள். மூவர் உட்கார்ந்திருந்தனர். ஓருவர் பொட்டும் திருநீறும். மற்றவர் கருநீலக் கண்களுடன் ஐரோப்பியர். இன்னொருவர் மீசையில்லாத சிங்களவர். அனைவரும் கோட்டுää டை சூட்டுடையோர். கேள்வி கேட்டுடைப்போர். குயுக்திக் கேள்விகள் போட்டுக் குடைவோர். மதியூகப் பதில் வராவிட்டால் சீட்டுக் கிழிப்புடையோர். இனித் தொடங்குவர் கேள்விப் போர்.
ஓரத்தில் ஒரு ரோபோ மனிதன். கண்களில் கருநீல நியோன் வெளிச்சம். முகம் கணிணி மயம். அதில் 40ää320.63 என்று ஒளியெழுத்துக்கள். ஆக்கிலா ரேபோவை நோக்கினாள்.உட்காராமல் நின்றாள்.
~குட்மோர்னிங் ஸேர்ஸ்|
~ப்ளீஸ்..டேக் யுஅர் ஸீற்ஸ்|
~தேங்க்ஸ்|
கதிரை நுனியில் அமர்ந்தாள். மையமாக நோக்கினாள். விழிகளில் ஆர்வம் தேக்கினாள். பர்தாவைச் சரியாக்கினாள். வங்கியின் ஆர்.ஏ.ஓ. வான நெற்றிப் பொட்டர் ஐரோப்பியரிடம் அறிமுகம் வாசித்தார். சிங்களவர் யோசித்தார்.
~இப்பெண் செல்வி ஆக்கிலா முஹமட் முக்தார். வயது இருபத்தியாறு. பீ..எஸ்.ஸி பி.எட்மினிஸ்ட்ரேஸன்ஸ். என்ட் எக்கவுன்டிங். ஜப்னா யூனிவேர்ஸிற்றி. உயரம் {ஐந்தடி நாலங்குலம். இலங்கைச் சோனகர். வங்கி முன்னனுபவமில்லை. தற்போதைய மாத வருமானம் வெறும் எண்ணூறு ரூபாய். பொழுது போக்கு வாசிப்பும் இணையத்தளச் சஞ்சாமும். ..இடது கை சரிவான கையெழுத்து. விவேகம் 63 விகிதம். தெரிந்த மொழிகள். தமிழ்ää ஆங்கிலம்ää அரபு...
~ஸிங்ஹள..? ஸிங்ஹள வெரித..?|
சிங்களவர் சிங்களத்தில் சிங்கமெனச் சீறினார்.
~ஸிங்கள டிக்கக் புளுவங் இதிங்|
சிங்களவருக்கு சிங்களத்தில் சிறிது சினுங்கினாள் ஆக்கிலா. சிங்களவர் சிரிக்காமல் உள்ளுர மகிழ்ந்தார். பொட்டு அறிமுகத்தை விட்டு விட்டு ஜரோப்பியரிடம் கேட்டுக்கேட்டுச் சொன்னார்.
~மிஸ்.ஆக்கிலா. உங்கள் பட்டம் எமக்கு இரண்டாம் பட்சம். நாங்கள் மூவரும் மூன்று கேள்விகள் கேட்போம். அளிக்கும் பதிலைப் பொறுத்தே தீர்மானிப்போம். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.|
ஐரோப்பியரும் சிங்களவரும்ää ஆக்கிலாவின் ~ஆளுமைத் தோற்றத்திற்கு|ப் புள்ளியிட்டு உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஓரு அரை நிமிடம் அறையிடம் மௌனம் உறைவிடம். சட்டென்று கேட்டார் பொட்டர்.
~மிஸ். ஆக்கிலாää இங்கே ஒரு மேசை ஐந்து கதிரைகள். மூன்றில் நாங்கள். ஓன்றில் நீங்கள். சரி.. இன்னொன்று யாருக்காகப் போடப்பட்டுள்ளது. ஜந்து சொற்களுக்குள் மூன்று விநாடிகளுக்குள் பதி....|
~வாடிக்கையாளருக்காக.|
ஒரே விநாடியில் ஒரே சொல்லில் பதிலிறுத்தாள். ஆக்கிலா. பொட்டு மறுமொழியால் திடுக்கிட்டு ஜரோப்பியரிடம் மினக்கெட்டு கூறிவிட்:டு திகைப்புற்றுச் சரணடைந்தார். ஐரோப்பியர் மெலிதான அழகான வேற்று நாட்டுக் கீற்றுப் புன்னகையுடன் ஆக்கிலாவை மேலும் சற்று உற்று நோக்கினார்.
~மிஸ். ஹாhக்கிலோவ்ää ~ஜீ.கே. இன்டர்நஷனல் பேங்க் லிமி;ட்டட்| என்ற நமது வங்கிப் பெயருக்கு எத்தனை ஆங்கில எழுத்துக்கள் தேவை.. பத்து செகண்ட் எடுத்துக் கொண்டு விடையளிக்.....|
~ஜீ.கே இனடர்நஷனல் பேங்க் லிமிட்டட் என்ற வசனத்திற்கு எந்தளவு ஆங்கில எழுத்துக்கள் தேவையோ அத்தனை எழுத்துக்கள் தேவை........|
ஒரே செக்கண்டில் விடையளித்தாள் ஆக்கிலா. குயுக்தியான விநாடிகள்தான் முக்கியம். ஐரோப்பா ~அடேயப்பா| பாணியில் கீற்றுவாய் பிளந்தார். அவரேயறியாமல் ~எக்ஸ்ட்ராக்ட்லி| என்றார். வாய் மென்றார். ஆமென்றார்.
அடுத்து வாளேந்திய சிங்களவர். டையை இறுக்கினார். முகத்தைக் குறுக்கினார். பேப்பரில் கிறுக்கினார். ஆக்கிலாவை உறுக்கினார். திடீரென வேகமாகச் சறுக்கினாப் போல் கேட்டார்.
~மிஸ்ஃ ஆக்கிலாää ஒரு சின்னக் கணக்கு.விடை சொல்லத் தேவையில்லை. ஆனால் விடைக்கான காரணம் சொல்லல் வேண்டும். இது உங்கள் ~ஒப்ஸவேர்ஸ|னைப் பொறுத்த விடயம். ஓக்கே.. 6 மாத காலத்திற்குää 22.03 வீத வட்டிக்குக் கொடுக்கப்பட்ட 63ää06ää75 ருபாய் 56 சதத்தை 3 வருடமும் 5 மாதமும் கடந்த பின் ஒரு மாதம் கிடைக்கும் தேறிய இலாபத்தை 3 வருட குத்தகையில் ஒரு கம்பனிக்கு 10 வீத வட்டிக்குக் கொடுத்தால்ää மாதாந்தம் ருபாய். 40ää320. சதம் 87 இலாபம் வரும் என்று ஒரு மனிதன் கணக்குக் காட்டினால்ää அந்த மனிதனை நம்புவீர்களா..?
~தாராளமாக நம்புவேன்| பட்டென்று பதிலளித்தாள் ஆக்கிலா.
~எப்படி.. எப்படி நம்புவீர்கள். முன்பின் அறியாமல்...?
~கணக்குக் காட்டியது ரேபோ மனிதனாச்சே..|
சட்டெனச் சொன்ன ஆக்கிலா மூலையில் நின்று கொண்டிருந்த மினி ரோபோவைச் சுட்டிக் காட்டினாள். ரேபோவின் மார்பில்.ää 40ää320.87 சதம் காட்டி டிஜிட்டல் நியோன் ஒளி ஒளிர்ந்து கொண்டிருந்தது. வாளைத் தவறவிட்ட சிங்க(ள)ம்ää வியந்து போய் பதிலால் அயர்ந்து போய் அமர்ந்தது போய். உடனே ஐரோப்பியர்ää
~ஓக்கேää மிஸ். ஹாக்கிலோவ்ää தேங்க் யு வெரிமாச்.| என்றார். ஏனைய இருவரும்ää ஆமோதித்து புன்னகைத்து பின் நகைத்து தலையாட்டினர்.
~தேங்க்ஸ் ஸேர்ஸ்...|
ஆக்கிலா அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. எழுந்து தலை வணங்கி வெளிவந்தாள். புதினேழாம் பட்டதாரி வாலிபன் பொட்டைக்கண்ணுடையவன் இராமக்கிருஷ்ணன் அழைக்கப்பட்டு உட்சென்றான். ஆக்கிலா கேட்போர் கூடத்தை விட்டும் வெளியே வந்தாள். அப்போது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினாள். அங்கே....
( நீலம் தொடரும்.)
No comments:
Post a Comment