Tuesday, July 7, 2015

ஆறாவது நிறம் செம்மஞ்சள்

ஆறாவது நிறம் செம்மஞ்சள்

அதிவிடியல் செம்மஞ்சள். அந்தி வானம் செம்மஞ்சள்.. மஞ்சள் பூசி மையல் கொள்ளும் மங்கையர் தம் நாணமுறு கன்னங்கள் செம்மஞ்சள்.  எம்மஞ்சள் என்றாலும் அம்மஞ்சள் செம்மஞ்சள் போல் அம்சமாயில்லை. 

ஓரெஞ்ச்ää பப்பாளிää இலந்தைää மாம்பழம்ää கரட்ää பூசணிää விளாää அன்னாசி என்பன செம்மஞ்சள் பழங்கள்.  இவற்றிலுள்ள  ~க்ரைப்போட்ளான்ரின்|ää ~அல்பா| புற்றுநோயையும் சற்றே குணமாக்கும். குருதி  விருத்தி பெறும்..நரம்புகள் முறுக்கேறும்..

செம்மஞ்சள் பட்டும்ää செஞ்சாந்துப் பொட்டும்ää இழுக்குதடி என்னை......| என இழுபட்டான் அவினாசிமணிக் கவிஞன்...~ஆரஞ்சுக் கன்னமோ..அழகு வண்ணக் கலரோ.....| என வாய்பிளந்தான் கவிகாமுப் புலவன்..




இளமஞ்சள் நிறத்தில்ää செம்மஞ்சள் மலர்கள் பூ10த்துச் சிதறிய ஸல்வார்ஹமீஸ் அணிந்து செம்மஞ்சள் ~ஸோல்| தோள் தழுவி மேலேறி கார்குழல் மறைத்து கூர்முகவழகை மேலுமோர்படி கூட்ட ஆக்கிலா  தயாரானாள்.  இன்று முதல் வேலை தினம். 




~வாப்பா....நான் ரெடி|   என்றாள்.




உம்மாவும்ää வாப்பாவும் அவள் எதிர் நின்றனர்.. பசி நெருப்பில் வயிறெரிந்துää சேமித்துப் படிப்பித்துக் நோயுற்றுää உருச் சிறுத்த உருவங்கள்... எல்லாம் இவளின் பிரகாசத்திற்காக தம்மை உருகு திரியாக்கிய  பெற்றோர்.........ஆக்கிலாவுக்காக...!




~அல்லாஹ்ட  காவல்......மகள்.. கவனம்..|

~பிஸ்மில்லாஹ்..|



வலது பாதம் முதலில் வைத்து சடுதியில் வீதியில் பாதியில் இறங்கித்  திரும்பிää  மஞ்சள் பூக்குடை விரித்துச் சிறிதாய்ப் புன்னகைத்து........திரும்பியும் பாராமல் விரைந்தாள் ஆக்கிலா.. எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறும் இந்நாள். நன்நாள்.. கன்நாள்ää  இப் பெண்ணாள் காத்திருந்த பொன்நாள்....இன்று  முதல் வேலை நாள்.



பேரூந்து தரிப்பிடத்தில் தயார்நிலையில் செம்மஞ்சள்நிற மட்டக்களப்பு பஸ்.. உள்ளேறினாள்... மெல்லேறினாள்.. இரட்டை ஆசனம் வேண்டிப் பெற்றாள்.. சிட்:டு காத்திருப்பாள்  காரைதீவில்...



அரைமணி நேரம் ஆள்தேடி.. நிரப்பி.. அடுக்கி பதுங்கித் தவழ்ந்து  காலை எட்டைந்து தாண்டியபோது பாண்டிருப்பில் ஆக்கிலா வேண்டியபடி  பத்தினிக் கோயில் பதி தாண்டியதும்; அருகில் பேரூர்ந்து சற்றுத் தரிக்க-



சிறுபிறை நெற்றிப் பொட்டுடன் மஞ்சள் சுடிதார் செட்டுடன்  பேரூர்ந்தில்; தாவினாள் சிட்டுக் கமலினி.  ஆக்களிடை ஆக்கிலாவைத் தேடினாள்..



~ஷ்;ஷ்ஷ்... கமலீ..இங்கே  வா...|   விரிசையிடையிருந்தாள் ஆக்கிலா

~ஷ்ஷ்ஷ்;;.. அப்பாடா.. அங்கேயா..?|  நெரிசலிடையுட் புகுந்தாள் கமலினி.
~குட்மோர்னிங்  ஆர்க்கீ..|
~ஸேம்  ட்டு யூ  கார்க்கீ..|



மறுபடி பேரூர்ந்து பேரூர்  பெயர்ந்தது. எந்நேரமும் எதுவும் நடக்கலாமெனும் போர்க்காலம்...பிணங்கள் தின்னும் பேய்க்காலம்.. முக்காலும் பயணிகள் முகங்களில் சாக்காலம் நோக்கலாம்... மறுபடி சோதனைச் சாவடிகள்...சோனையிடல்கள்..அதிரடிப் படைகள்... கவனம் மிதிவெடிகள்... இடையிடையே துணைப்படைகள்.. துரேகத்தின் அடிப்படைகள்... இறங்கிää நடந்துää ஏறிக்கடந்துää ஆடி நடந்துää ஆறடி ஊர்ந்துää அடைந்தது மட்டக்களப்பு ஊரு. பேரூர்ந்து.....




~அப்பாடா....இறங்கலாமினி....கமலினி..|

~ஆமாண்டா... நமக்கினி..நடையினி..|


நடந்தனர். அடைந்தனர். நுழைந்தனர்.. பிராந்திய முகாiமாளர் பிரத்தியேக அறை போய்ச் சேர்ந்தனர். ஏற்கனவே  அங்கு இராமக்கிருஸ்ணன் காத்திருந்தான். செம்மஞ்சள் ஐரோப்பியர் இருந்தார்.  இவர்களைக் கண்டு மகிழ்ந்தார். 



~வெல்கம் கேர்ள்ஸ்...| என்றார். கை தந்தார்.. குலுக்கினார்.. ஆங்கிலத்தைக் கிலுக்கினார். வாழ்த்;தினார். சொன்னார்.



~என் பெயர் மேக்மில்லன் பரூச்சர்...மேற்கு ஜர்மனில் பருலின் சிற்றி....திருமணமாகி பின் பிரிந்தேன்....மனைவி இந்தியனுடன் வாழ்கிறாள்.. விட்டுவிட்டு ஜீ.கே. வங்கியில் அஸிஸ்டன்ற் கிளரிக்கலில் சேர்ந்தேன்.. முழு மூச்சாக உழைத்தேன்..எல்லா பரீட்சையும் பாஸ் செய்தேன். இப்ப  பிராந்தியங்களின் இணைப்பு முகாமையாளராக இருக்கிறேன்.. பிரத்தியேகமாக எனக்கு மட்டும் ~கட்டர்பில்லர்| என்ற குட்டி விமானம் தந்திருக்கிறது வங்கி....



கொஞ்சம் பேச்சை நிறுத்தி இவர்கள் மூவரையும் பார்த்தார் அழுத்தி. மறுபடி ஆரம்பித்தார்.



~நமது வங்கி உலகின் மூன்றாவது வர்த்தக வங்கி.. இரண்டு தடவைகள் ஐ.நா. விருது வென்றது.. நியூயோர்க்ää இலண்டன்.. சிங்கப்பூர்ää ஒஸ்ட்ரேலியாää ஜேர்மன்ää கனடாவில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. ஐயாயிரம் கோடி அமெரிக்க டொலர்களை முதலீடாக வைத்து உலக வர்த்தகத்தைக் கட்டிப் போட்டிருக்கிறது....உங்கள் மூவருக்கும் பிராந்தியங்களின் உதவிப் பயிற்சி முகாiயாளராகச் செயற்பட பயிற்சியளிக்கும் ஏழு வாரம்... பின் பரீட்சை...அதி கடினம். .மூளையின் ~பின்ற்ரேஸன்|கள் வெடிக்குமளவுக்கு இருக்கும்... சித்தியடைந்தால் பதவிச் சொர்க்கம்.. சித்தியடையாவிட்டால் பயிற்சியோடு சாதாரண கிளரிக்கல்... எல்லாச் செலவுகளும் வங்கி பொறுப்பேற்கும்.. அண்டவேர்  உட்பட......



என்று வெடிப்பொலிச் சிரித்தார்.. ஆளுக்கொரு செம்மஞ்சள் பொன்னெழுத்தில் பொறித்த பைல்கள் தந்தார். சிக்கலான வாhர்த்தைகள் கொண்ட ஸீ.டீ.க்கள் தந்தார்..உடனடிப் பணம் பெறும் ~மணிக் கார்ட்|டுகள்  தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியில் தந்தார்...மறுபடி சொன்னார்..



~இன்றைய உங்கள் மகிழ்ச்சியான தினத்தை முன்னிட்டு என்னோடு பகலுணவு அருந்த அழைக்கிறேன்...அதுவரை இந்த வெப் தளத்தைப் பார்வையிடுங்கள்.. உள்ளவற்றை மூளை உள்ளவரை உள் வாங்குங்கள்.. இதில் ஒப்பமிடுங்கள்.. நன்றி..|



உடன் விடை பெற்றுச் சென்று விட்டார்...சீருடைப் பணியாள்  உயர் ரக குளிர்பானமும் மென் போதை மதுபானமும்ää    கிழங்குச்சீவல்களும்  கொணர்ந்தான்.. பணிவுடன் வைத்தான்... சென்றான்...

ஆக்கிலாவும் கமலினியும்ää இராமக்கிருஷ்ணனும் திகைப்பான கனவுலகில் இலயித்துப் போய் சில நிமிடங்கள் பேச மறந்திருந்தனர்....


~...........   .............   ..............?| என்று கேட்டாள் கமலினி.


~.........   ..............   ..............|  என்றாள் ஆக்கிலா


 ஆக்கிலா கமலினியுடன் கேட்போர் கூடத்திற்கு வந்;தாள்..அங்கிருந்த கணிணியில் ஜீ.கே வங்கி இணையத்தளத்தைப் பார்வையிட்டனர்...ஆரம்ப வலாறுகள்.. மூலதனங்கள்...சர்வதேச வர்;த்தகத்தில் சிக்கலான ஆங்கிலச்சொற்கள்..தாண்டிய தடைக்கற்கள்..கொடுகடன்ää படுகடன்ääஎடுகடன்..உடனுக்குடன்...


விபரங்கள்...ஊழியர் சேம நலன்கள்.. பயிற்சி அறிமுகங்கள்... கால்ää அரைää இறுதி ஆண்டறிக்கைகள்.......திகைப்பான வங்கி உலகிலிருந்து மீண்ட போது பகலுணவுக்கு அழைப்பு வந்தது..  ஏ.ஆர்.ஓ வுடன் மினக்கெட்டுச் சாப்பிட்டு இறுதி உபதேசங்கள் பெற்று நாளைய கடமை பொறுப்பேற்று நான்கு மணிக்கு எல்லாம் முடிந்தன...............


~கமலினி இனிப் போகலாமினி..|


~வாருமினி....பஸ்ஸேதும் வருமினி...|


வங்கியை விட்டும் வெளியே வர  அலறி ஓடின வாகனங்கள்...குளறி ஓடினர் சனங்கள்...அமளி துமளிப்பட்டது நகரம்..  அடித்திழுத்துப் பூட்டப்பட்டன கடைகள்....  மறிக்கப்பட்டன பொலிஸ் தடைகள். விரைந்தன அதிரடிப் படைகள்.. ஏன்...என்ன...? இல்லை விடைகள்...தற்காப்பு தேடி ஓடும் சனங்களில் பொற்காப்பு அணிந்தோடிய பெண் ஒருத்தியை நிறுத்திய போது அவள் சொற்கோர்வையின்றியே சொல்லித் தடைதாண்டி ஓடினாள்..............



~பாலத்தடியில கண்ணிவெடியில..அதிரடியில ஏழுபேர் போல...பெடியளில மூணு பேரு இல்ல....




இன்றைக்குமா...? கமலினி பயத்துடன் ஆக்கிலாவின் கையைப் பற்றினாள்...ஆக்கிலா தைரியத்தைக் கைப்பற்றினாள்..உடன் மறுபடி வங்கியை நோக்கி விரைந்தாள்...நுழைந்தாள்..இனி.....?



                                              

                    (சிவப்பு தொடரும்....)


  


1 comment:

  1. Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
    Harrah's Cherokee Casino & 영주 출장안마 Hotel is one of the largest 익산 출장마사지 hotels in North Carolina. The property is connected to two gaming arcades, 계룡 출장마사지 Harrah's Cherokee Casino & Address: 777 경기도 출장마사지 Casino Drive, Cherokee, NC 전라북도 출장샵 28719Phone: +1 (800) 541-9966

    ReplyDelete