Tuesday, July 7, 2015

முதலாவது நிறம் ஊதா.

முதலாவது நிறம் ஊதா.



     ஊதா!  சாதா வண்ணங்களை விடää ஊதாதான் நேஸத்திற்கு தோதானது. ஊதா காதல் வண்ணம். ஊதாப்பூ அரம்பையரின் நாதாப் ப10. ~ஊதும் வண்டும் ஊதாப் பூ | என்று வியந்தான் வைரமுத்துக் கவிஞன். ~ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டுகிறது..| என்று குறும்பு சொன்னான் இன்னொரு நாதாப் புலவன். ஊதாப் பூச் சூடிய மாதா இராமனின் சீதா.


திராட்சைää ப்ளம்ஸ்ää நாவற்பழம்ää ஊதாப் பெர்ரிஸ்ää ஸ்ட்ராபெர்ரிஸ்ää போன்றன ஊதாவுக்குரிய பழங்கள். ஊதாப் பழச் சாறுகளில் உள்ள ~ப்ளோவனைட்ஸ்|ää உயிர்ச்சத்து புற்று நோயைக் கூடச் சற்றுக் குறைக்கும்.

ஊதா மலர்கள் ஆற்றங்கரையில் அடர்ந்திருந்ததால் அந்த ஊருக்கும் ~ஊதாப்பத்து| என்று பெயர்.  ஊதாப் பச்சையில்ää ஊத்தைப் பச்சை வேலைப்பாடு நெய்த சேலைச் சோலையில் துயின்ற ஊதாப்பத்து அதிகாலை வேளை கண்விழித்தது. மார்புக் கச்சை அணிந்தாற்போல் ஊரின் இருபக்கமும் ஆறு. வார்ப்புப் பசுமை வயல்வெளியில் வரம்புகளின் கூறு. இச்சை மிகுந்த பட்சிகளின் வீறு. புஷ்டியான பசுக்களின் ம்ம்ம்ம்பாhhக்கள் வேறு. இயற்கை இரைச்சல்கள் ஒரு சங்கீதமாய்க் கேட்கும் பாரு... அந்நேரம் எழுந்திருந்தாள் ஆக்கிலா..! 


 அதிரடிப்படைக்கும்ää புலிப்படைக்கும் அடிப்படையிலேயே பயப்பட்டிருந்த மக்கள் விடிந்தாலும்ää என்ன நடந்தாலும் உடனேயே வெளியே தலை நீட்டுவதில்லை. ஆனால் இன்று அதற்கெல்லாம் பயப்பட்டு முடியாது. ஆக்கிலா உடன் வெளிக்கிட்டாக வேண்டும். இன்று நேர்முகப்பரீட்சை இருக்கிறது. மட்டக்களப்பில்!. சும்மா அல்ல.. சர்வதேசங்களில் கிளைகள் பரம்பிய இம்மாம் பெரிய ~ஜீ.கே| வங்கியில் பிராந்தியங்களின் உதவி முகாமைத்துவ பதவி. ஆக்கிலா...?



ஆக்கிலா டீ ளுஉ.( டீ.யுன.)



 தக்க வேலை கிட்டாத பட்டதாரி.. வீட்டில் சட்டைதாரி.. சித்திரை பதினாறு வந்தால் வயது இருபத்து ஆறு. நித்திரை  உதறி எழுந்தாள் இன்று. எத்திரைக்குள் மறைத்தாலும் அத்திரை கிழித்து ஒளி வீசும்ää பர்தாவுக்குள் பத்திரமாய்ப் பாதுகாத்திருந்த சித்திரை மாத நிலாமுகம்.. காத்திரமான உடல்வாகு. நேத்திரங்களின் கீழே இரு பாத்திரங்களில் விழிகள் சீனிப்பாகு..



நேர்முகப்பரிட்சயமில்லாதோர்ää நேர்முகம் பார்த்து நேர் கண்டு பரீட்சிப்பர். எத்தனையோ நேர்முகப் பரீட்சைகள்.. அத்தனையும் வேர் ஊண்றாத அநிச்சயங்கள். நேர்முகம் காண தன் கூர்முகம் கழுவிக் குளித்தாள். கார் குழல் சீவி முடித்தாள். உள்ளதற்குள் நல்லதாய் ஓர் உடை தேர்ந்தாள். தயாரானாள்.



பட்டம் பெற்றது முதலுக்கே நட்டம் எனத் திட்டும் உம்மா பாயில் அட்டை போல பாதி வட்டமாய்ப் படுத்திருந்தாள். எட்டிக் கடந்து வாசலுக்கு வந்தாள். திட்டம் இட்டு;ப் பட்டதாரியாக்கிய வாப்பா வயலில் மிதிகால் வெடிபட்டுக் குதிகால் இழந்ததால்ää மடிகாலில் தரையிருந்து விடிகாலை வேடிக்கையில் வாடிக்கையாயிருந்தார். சூடிக்கையாக ஆக்கிலாவை நோக்கினார்



~கவனம்..மகள்..கவனம்..| அவணக் கணக்கில் கவலைப்பட்டு விடை தந்தார். புவனம் நன்றாய் வெளிக்கத் தொடங்கியது. கிட்டுமா  இந்த வேலையாவது..? எட்டுமா வங்கிச் சம்-பழம்.... உம்மாவின் வாட்டும் நோயை ஓட்டுமா... நாட்டம் இறைவன்  என்றால் என் குரல் அவனுக்குக் கேட்குமா.....விரட்டுமா வறுமையை...? மதிக்குமா வங்கிää திறமையை...! சிறைப் பிடித்த எண்ணங்களை விரட்டி வெளிக்கிட்டிறங்கினாள் வீதியில்..



வட்டப் பாதையில் ஆக்கிலா எட்டடெடுத்து நடக்கையில் தொட்டணைந்து வந்ததொரு மட்டக்களப்பு மினி பஸ்.



~மட்டக்களப்பா.?..ஏறுங்க மிஸ்..| என்றான் பஸ் பொஸ். ~யெஸ்| என்ற ஆக்கிலா ஏறினாள்... உடன் முகம் மாறினாள்.. உள்ளிருந்தோர் பலர்  கிட்டக் கிட்ட வெளியேறிய பட்டதாரிகள்.. உடனிருக்கும் போட்டிதாரிகள்.. இவர்களை மீறி காலை வாரி விடுமா வேலை..?



~ஹெலோ..ஆக்கி! இப்படி இருங்க..குட்மோனிங்கப்பா| 



என்றாள் வெகுநாளைய பரீட்சய ஆச்சரியக் குரலில் பின் சீட்டில் இருந்த ஒரு சிட்டுப் பெண். மொட்டு மார்பும் கட்டு உடலுமாய் இருந்தாள். பாவலர் பஸீல் காரியப்பர் பாடிய ~அழகான ஒரு சோடிக் கண்களின்| மேல் நெற்றிப் பொட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிவில் இட்டு இருந்தாள். ஊதாப் பட்டு நிறத்தில்  சுடிதாரும்ää ஊதாச் சிறுமலரும் சூடியிருந்தாள்.  ஆக்கிலாவுக்கு ஒருக்களித்து  இருக்கையளித்து இடம் தந்தாள்.



~ஹெலோ கமலினிச் சிட்டு..வெரிகுட் மோனிங்..|. பதில் கூறி அமர்ந்தாள் ஆக்கிலா.

~என்ன ஜீ.கே. பேங்க் இன்ற்;ரவிய10தானே....?| சிட்டுக்கமலினி பட்டென்று கேட்டாள்.
~அன்னா ஓக்கேää பேங்க் இன்ற்ரவிய10தான்..ஏன்ää?|
~மூன்று வேகன்ஸி..முப்பத்துமூன்று பேர்க்கு  இன்ற்ரவிய10|
~என்று நீசொன்னாலும் முயன்றுதான் பார்ப்பேன் இன்ற்ரவிய10|
~மூன்று பேர் தேவையென்றால் யாரென்று....?|
~மூன்றில் நானொன்று. இன்னொன்று நீயென்று நினை. துணிவே துணை|
~கட்டாயம் கிட்டுமா..|
~கிட்டாதாயின் வெட்டென  மற|
~எட்டாதாயின் பெற்ற பட்டம்?|
~விட்டு விளையாடு நட்டநடுவானில்..| 


விட்டாளில்லை பொட்டுச் சிட்டுக் கமலினி. வழி நெடுக  காதுகளில் தேன் பிழிந்தாள். பழைய பல்கலைக்கழக நினைவுகளில் அழிந்தாள். ஆக்கிலாவும் அவளுடன் அமிழ்ந்தாள்..



திடீரென்று மினிபஸ் படீரென்று நின்றது. உள்ளிருந்த வானொலி ~சடீரென்று| வாய் மூடியது. பயணிகள் முகம் வாடியது.  காட்டுமாவடிச் சோதனைச் சாவடி அது.



~..றங்கிப் போங்க..றங்கிப் போங்க..| சாரதி குரலெடுத்தான்.



~பேக்குகள திறந்து காட்டுங்க..நாக்குகள பூட்டிக் கொள்ளுங்க| நடத்துநன்  விரலெடுத்தான். சனம் கும்பலாக இறங்கியது. அதிரடியினர் பம்பலாக நின்றிருந்தனர். ஆக்கிலாவும் கமலினியும் எழும்பலாயினர்

.
~இறங்கடி அதிரடி வரமுன்னடி..|


 ஓரடி ஈரடியாய் வைத்து இறங்கி கீழடி வைத்தாள். அடிமேலடி சீரடி வைத்து நடந்தாள். அதிரடி முகாமை அடைந்தாள்.  வரிசையில் தன்முகம் காட்டி முன்வரிசை பிடித்தாள். 



அதிரடிப்படை பெண் வீராங்கனை வீறாப்புடனும்ää வெறுப்புடனும் விறைப்புடனும் சீருடை மேல் கவச ஓருடை தரித்து நின்றாள். சீருடை மீறி மார்புடை த்து நின்றது. ஆக்கிலாவைக் கூர்மையாகப் பார்த்தாள். ஆக்கிலா வேர்த்தாள். மௌனம் கார்த்தாள்.



~ஐடென்டி...? ஐடென்டி கண்ணங்கோ...!| கேட்டாள் அதிரடி தடாலடி.

~ஐடென்டி..? ஐடென்டி இன்னாங்கோ..| கொடுத்தாள் பதிலடி தள்ளாடி..
~ஊரென்னா...?|
~ஊதாப்பத்து. ண்ணா..!|
~பேரென்னா...?|
~ஆக்கிலா..|
~போறெங்கோ..?|
~பெற்றிக்கலோ..|
~ஏனுங்கோ...?|
~வேணுங்கோ...|


மறுபடி முறைப்புடன் பார்த்த காக்கிச் சட்டைää ஆக்கிலாவின் கைச்செட்டையைப் பிடித்து சல்வார்செட்டைத் தடவினாள். கைக்குட்டையைப் பிரித்தாள். கைப்பையைக் குடைந்தாள். 



குண்டு கொண்டு போவாளென்று சந்தேகம் கொண்டு விண்டு விண்டு நண்டு போல தோண்டுகின்றாள். ஓண்டும் இல்லையெனக் கண்டு திருப்தி கொண்டு தடையைத் திறந்தாள். விடை தந்தாள். தொடைகள் வலிக்க ஆக்கிலா நாக்கெழாமல் திட்டடியபடி  மறுபடி மறுமுனையடைந்தாள். சனம் சோதனை மேல் சோதனை அனுபவித்து உலக சாதனை புரிந்து வேதனையுடன் மறுமுனை வந்து சேர்ந்தனர். வாலிபர் சிலர் மடக்கப்;பட்டனர். பயனம் முடக்கப்பட்டனர்.



வரிசையில் சிலää வரிச்சட்டை வழிசல்கள் நெரிசலை வைத்து பெண்களிடம் தம் கைவரிசை காட்டினர். பெண்கள் கண்கள் புண்கள் ஆவதை ஆக்கிலா நோக்கினாள். சிட்டுக் கமலினி வரிசை விட்டு கஷ்டப்பட்டு வந்துற்றாள். அதிரடிää பஸ்ஸேறி  வரிசைக்கு மிஸ்ஸாகி  இருந்தோரின் தஸ்தாவேஜூகளும்ää பிஸ்தாப் பொருட்களும் சோதித்து கீழிறங்க..  மறுபடி பஸ் பிறைவடி திரும்பி  இவர்களிடை வந்தது. 



~ஏறுங்க..ஏறுங்க...வாருங்க..|



கூட்டம் குழம்பி ஏறியது. கட்டுப்பாட்டை மீறியது. பஸ் எழும்பிச் சீறியது. ஆறு சோதனைச் சாவடிகளிலும்ää சாவடி பட்டுää அன்னக் காவடிää அரிசிக் காவடி பட்டுää.. நடைக் காவடி எடுத்துää தாவடிச் சந்தி தாண்டி மட்டக்களப்பை ஒருவாறு எட்டிப்பிடிக்க மணி பதினொன்று.. அப்போது...?



                              ( கருநீலம் தொடரும்..) 


No comments:

Post a Comment