ஏழாவது நிறம் சிவப்பு
சிவப்பு உழைப்பின் வனப்பு...செம்பிறையும்ää சிவப்புச் சிலுவையும் சேவை..சிவப்புச் சட்டை பொதுவுடமை..சிவப்புக் கோடு எச்சரிக்கை..சிவப்பு விளக்கு ஆபாசம்.. சிவப்புக் கொடி அபாயம்..சிவப்புக் குருதி உடலுக்குறுதி...வானவில்லின் கடைசி வண்ணம் சிவப்பு..அடிவானம் சிவப்பு..உடலுக்கு வெப்பம் தருவது சிவப்பு.. சிவப்புக்கு ஆயிரம் சிறப்புக்கள்....
காசநோய்ää நீரிழிவுää காமாலைää சொறி சிரங்குகளுக்கு அருமருந்து சிவப்பு.. .அப்பிள்ää தார்ப்பூசனிää கொய்யாää செந்திராட்சைää என்பன சிவப்பின் பழங்கள்...இவற்றிலுள்ளää ~லைப்ஸோப்பேன்| உடலுக்குள் நோய்களை வேறாக்கி ஆரோக்கியத்தை நேராக்கிச் சீராக்கித்தரும்..சிவப்புக் கல் மாணிக்கம் இதயத்தைப் பாதுகாக்கும்.. செம்மலர்கள்..செங்குருதி.. செஞ்சிலுவை..செஞ்சீனா.. செம்மீன்..
செவ்வரி..செஞ்சாந்து...செவ்விதழ்கள்.......எல்லாமே செம்மையின் வன்மையான தன்மைகள்.
~சின்னச்சின்ன மூக்குத்தியாம்ää சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்..|என வியந்து இரஸித்தான் மதுரை முத்தையாக் கவிஞன்.. ~செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய்..| எனக் கேட்டுத் தவமிருந்தான் மருதகாசிப் புலவன்.....
பதட்டத்தில் சிவந்து போன ஆக்கிலாவும் ää கமலினியும் சிவப்பு இரத்தம் இழந்து வெளுத்த முகத்தைச் சிவப்புக்கைக்குட்டையால் துடைத்தனர்...வங்கியின் கேட்போர் கூடம் அடைந்தனர்.
~என்ன சனியன் இது........இன்றைக்குமா...?|
~கண்ணே கமலினி...இது என்றைக்குமே.....|
~இப்ப என்னடா செய்வது ஆர்க்கீ.........?|
~இருந்து பார்ப்போம் வெய்ற் அண்ட் ஸீ...!|
வங்கியுள்ளே பதுங்கி உள்ளே கிடந்த பெஞ்சுகளில் அமர்ந்தனர். திடீர்ப் பரபரப்பில் வாடிக்கையாளரையும் உள்ளே வைத்து வங்கியை சூடிக்iகாக மூடி விட்டதை வேடிக்கை பார்த்தனர். கருமபீடங்கள் முடிவுக்கு வந்தன.. பாதுகாப்புச் சீருடையர் துப்பாக்கியோடு ஆபத்து வராதென்ற நப்பாசையோடு கதவருகே அனாவஸ்ய தயாரில் விறைத்தார். வெளியே வாகன அலறல்கள் செவி கிழிய........பாலத்துப் பக்கம் வேட்டொலிகள் கேட்டொலிக்க.....மாலைää நேரம் மெல்ல மெல்ல ஆறு மணி ஓரம் செல்லச் செல்ல வேட்டொலிகள் குறைந்தன..பின்னொரு சரவெடியாய் முழங்கிய அவசர வெடியுடன் வெடியொலிகள் ஓய்ந்தன...அப்பாவிச் சனம் எத்தனையோ செத்தனையோ என எண்ணி மனங்கள் காய்ந்தன...
மெதுவாக வீதியில் சில மனிதர் நடமாட்டம் தெரிந்தது...பின் ஒரு சில வாகனங்கள் ஊhந்தன.......கடைகள் திறக்கத் தலைப்பட்டன...தொடர்ந்து யாவும் பரபரப்புடன் இயங்கத் தொடங்கின.....வங்கியின் கதவு திறந்ததும் வாடிக்கையாளர்கள் வெளிச்சிதறி தகவல் பொறுக்கினர்..சந்திகளில் வதந்திகள் வாங்கினர்..
~அஞ்சு பேர்; உடல்கள் பிஞ்சி பறந்ததாம்.....|
~பிக்கப்புத் தூளாம்......கெப்டன்கள் ஏழாம்..........|
~ஹொஸ்ப்பிட்டல்ல சவமாம்...பிஸ்டல் குழுவும் வந்ததாம்...|
~ஊர் போக ஓர் பஸ்ஸ_ம் இல்லியாம்.....|
~யார் போக.......?|
~நீர் போக நான் போக அவர் போக ஓர் வாகனம் இல்லை...|
வாய்வதந்திகளுடன்ää பேய் அடித்த முகங்களுடன் ஆக்கிலாவும் கமலினியும் செய்வதறியாது யோசித்தனர். எதுவும் கதைப்பர் மக்கள்... நம்பக் கூடாது சிக்கல்...
~ஆர்க்கீ....நமது அடுத்த திட்டம் என்னவோ....?|
~உடுத்த உடையுடன் ஊர் போய்ச் சேருதலே.|
~வாகனம்........? வருமா....?~
~ஓர் கணம்.....பொறும்மா|
~எப்படிப் போவது....?|
~எப்படியும் போவது...!|
ஆக்கிலா தலைக்குள் யோசித்தாள்...கமலினி மனதுக்குள் பூசித்தாள்...ஆக்கிலாவுக்குச் சட்டெனப் பொறி தட்டினாற் போல் கருத்துரு (ஐடியா) தட்டியது. சட்டென எழுந்தாள்..
~சிட்டே...டக்கெண்டு வா டக்கே...|
~வடக்கேயா?|
~இடக்காகப் பேசாதே...|
ஆக்கிலா விருட்டென எழுந்து கமலினியுடன் வங்கி மேல்மாடி ஏறி விரைந்தாள்...நல்ல காலமாக ஐரோப்பியர் சுருட்டொன்று கொளுத்த அதே நேரம் வெளியானார்...
~ஸேர்ப்பிரைஸ்;;;....டிடின்ற் கோ யூ.......கேர்ள்ஸ்;;;?|
~ஹெள ட்டு கோ ஸே... நோ வெஹிக்கிள்ஸ்;;;....!|
~ப்ரொப்ளம்;; ஸோல்வ்ட்...|
என்றார். உடன் தொலைபேசினார் கண்கண்ணாடியை கழற்றினார்..அந்நியரிலும் அந்நியரானார். புன்னகையுடன் பார்த்தார்.. அந்நியோன்யமாகச் சொன்னார்.
~ஓக்கே கேர்ள்ஸ்...வெஹிக்கிள் ரெடி.. யூ கேன் கோ நௌ...!|
பட்டாம் பூச்சி விழிகள் படபடக்க ஆக்கிலாவைப் பார்த்தாள் கமலினி.. பூரித்த மகிழ்;சியுடன் வெளியே வந்தனர்.. இரத்தச் சிவப்பு ~டெலிகா| வாகனம் தயாராகி வந்தது...
~ஏறடி என் சிட்டே.....!|
~கூறடி எங்கிட்டே...எப்படி இந்த கருத்துரு ?|
~வேரடி மூளையில் தேடியது.|
~பாரடி எனக்கிது தோணலை..|
~சீரடி வைத்து ஏறடி...|
~கௌட்த ஒகொல்லோ...கொஹெத யண்ட இதிங்...?
சீருடைச் சாரதி விடுக்கென இறங்கி இவர்களை கடுக்கெனப் பார்;த்து சிங்களத்த்pல் சுடுக்கெனக் கேட்டான். ஆக்கிலா அவனை மிடுக்குடன் பார்த்து அவன் திடுக்கிடுமாறு வெடுக்கெனச் சொன்னாள்.
~ஐ அம் த நியூ ரீஜனல் அஸ்ஸி;ஸ்டன்ற் ஒவ் ஜீ.கே. பேங்க்....|
சட்டெனச் சீருடைச் சாரதி மரியாதையுடன் கதவு திற்ந்தான். வாய் மூடினான். பவ்வியமாக அவர்கள் உள்ளேற உதவினான். தானேறி சாரதி ஆசனத்தில் அமர்ந்து குளிராக்கியை இயக்கினான். கட்டளைக்காக காத்திருந்தான். சில்லென்று குளிர ஆக்கிலா மெல்லிய குரலில் ஆணையிட்டாள்.
~ப்ளீஸ் கோ கல்முனே ரோட்.......|
உடனே டெலிகா ஊhந்து திரும்பி வேகம் பிடித்தது..விரைந்தது.. முப்பது விநாடியில் பாலத்தடி வந்தது.. இராணுவ முகங்கள் குவிந்திருந்தன...அதிரடி கைகாட்டியது..மறித்தது.. யன்னலில் சிங்கள மீசையில்லா இராணுவமுகாமுக்குரிய முகம்.. விஸாரித்தது...சாரதியின் தாய்மொழி விபரிப்பில் உடனேயே போக அனுமதி கிடைத்தது.... தாமதித்து வரிசையில் காத்துக் கிடந்த எழுபத்தி இரண்டு வாகனங்களையும் இரண்டே விநாடிகளில் கடந்து டெலிகா கல்முனை நெடுஞ்சாலையில் பறந்தது...கல்லடிக் கடலோரக் களப்பு வழியே டெலிகா திரும்பிய போது கமலினி சொன்னாள்.
~ஆக்கீ...மேலே பாரு.......!|
~நோக்கீ...னேனே என்ன கூறு?|
கமலினி காட்டிய திசையில் ஏழு வர்ணங்களும் பளீரிட பாரிய வில்லென வளைந்து தெரிந்தது ஒரு வானவில். வானவில்..................?
(வெள்ளையுடன் முடியும்....)
No comments:
Post a Comment