மூன்றாவது நிறம் நீலம்.
நீலம் வர்ணங்களில் தனி ஜாலம். தனிக் கோலம். நீளக் கடல் நீலம். நிர்மல வானம் நீலம். நஞ்சுண்ட நிமலன் நீலக் கண்டன். நீளக் கண்ணுடைய கண்ணனை நீலக் கண்ணன் என்பர். கண்களில் நீலம் இருந்தால்ää நிலம் ஆளும் பாக்கியம் சூழும்.
~நீலக் கடலலையோ....எந்தன்நெஞ்சினலைகளடீ..| என ஆச்சரியப்பட்டான் நீலத் தலைப்பாகைப் பாரதி. ~கண்களில் நீலம் படைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ.. | என்று வியந்தான் மருதகாசிப் புலவன். ~நீலப் பட்டாடை கட்டிக் கடலாடும்...| என்றான் நீலக் கண்ணன்தாஸன். நீள விலகலுடையது நீலம். நீல நிறத்திலில்லாவிட்டாலும்ää நீலப் படம் விரசம். நீலவானம் இரசனை. நீலமாணிக்கம் அணிந்தால் ஆயுள் நீளும்.
ஆஸ்மாää இருமல்ää மூட்டுவலிää வாதநோய்கள் முதலியன நீல ஆடைவகை அணிந்து வர சுகமாகும். சுவாசமும் நீளமாகும். நீலப் பொர்ப்பழம்ää அவுரிää என்பன நீலப் பழங்கள். ~எந்தோசியானின்ஸ்|ää ~அன்ரியாக்கிடன்ஸ்|ää ஆகிய உயிர்ப்புக்கள் நீலப் பழங்களுக்குண்டு. பொதுவாக நீலம் மூளையையும் சீலம் செய்யும். தம் நீல நயணங்களால்ää நித்திலத்தையே நிறுத்தி வைத்தனர் அரசி கிளியோபட்ராவும்ää இளவரசி டயானா பார்மரும்.
ஆக்கிலா தனது நீல ஸ்காபைத் தளர்த்திச் சரிசெய்தாள். நீலக்குடையை விரித்து வான் நோக்கிப் பூக்கச் செய்தாள். வீதியில் பாதியில் இறங்கினாள். அப்போதுதான் தோளில் விழுந்தது ஒரு கை. திரும்பினாள். அதே சிட்டுக் கமலினி.
~என்னம்மா ஆக்கிலா மெடம். இன்றவியூ எப்டீ...?|
~எம்.எம்.ஏ. ஆக்கிலா ஐஅம். இன்றவியூ பிப்ட்டி!|
~நம்பிக்கை உண்டா கண்ணு..|
~நம்பிக் கை கொண்டா கண்ணு.|
~பஸ் ஸ்டான்ற் மட்டும் நடப்போம் வா...|
~பஸ் ஸ்ட்ராற் ஆகு மட்டும் கிடப்போம்..போ..|
~ஆக்கிலாää இன்னும் உம்மட பழைய கவிதைத் தனமும் நக்கலும் போகல்லைப்பா. சு;சாää யூனிவேர்ஸிற்றியில உம்மட புனைபெயர் வானவில் என்பதும்ää உம்மட ஆர்க்கீ கூர் மூக்கி என்கிற பட்டமும் எனக்கு ஞாபகமிருக்....||
~அது மட்டுமல்லää கமலினி விஸ்வமித்ரன் என்ற இயற்பெயர் உடைய நீர் சிட்டு என்கிற புனை பெயரில் எழுதி வாஸித்த அந்த காரைதீவுக் கவிதை அடடா..உனக்கே மறந்திருக்கும். நான் சொல்கிறேன். உன் கவிதையை சரியா கூறு. செவியை என்னிடம் குவி. கமலீ.
யாரைத் தீ வைத்தாலும்
பேரைத் தீ வைத்தாலும்
என்
ஊரைத் தீ வைக்காதே - பாவி
காரை
தீவைத் தீவைக்காதே
மாரைத்
தீவைத்து மதுரையைத்
தீ வைத்த - கண்ணகி
பேரை வைத்த காரைத்
தீவைத் தீ வைக்காதே..!
இக்கவிதையை நீ 1993ம் ஆண்டு சித்த்pரை மாதம் எழுதி வாஸித்தாய். தவிரவும்ää கிருஷ்ணமூர்த்தி என்கிற ~கிட்டு| உன்னுடன் இட்டமாக கிட்டக்கிட்ட நெருங்கியதும் கூடத்தான் ஞாபக...|
~வெகு ஆச்சரியம். ஆக்கிலா என்றொரு அதிசயம். ஆக்கீää என் அழகான கூர் மூக்கீ.. நீர் சொன்தெல்லாம் என்னதெல்லாம் உண்மை எல்லாம். ஆக்கீää நீர் உம்மட முஸ்லிம் மஸ்ஜிதுல....|
~முஸ்லிம் மஜ்லிஸ்|
~அதுல உங்கட ~மிலேனியத்தை நோக்கிய விழிகள்..| என்ற பெண்ணியல் சார் ஆய்வு தங்கப் பதக்கம் பெற்றதும்ää பேக்கல்ற்றியையே அசர வைத்த கட்டுரை அது. வேந்தரே வியந்தாரே... நான் உங்கிட்ட என்ட ஓட்டோகிராபை நீட்டியதும்...ஞாபக......|
~நான் அதுலää கமலினிச் சிட்டேää கிட்டைக் கட்டிக்கிட்டு கட்டுச் செட்டாய் வாழ்.| என்றெழுதி நீட்டினேன்.கிராபை...|
~நான் கோபித்து நீட்டினேன் விழிமுனை வாளை..
~நான் ஏகோபித்து காட்டினேன் அதோ பார் கல்முனை பஸ்ஸை.. ஏறு..கமலினிப் பெண்ணே..|
~நோ.. தொங்கி வருகிறார்கள். நாமேறினால்ää நம்மில் தாமேறுவார்கள் தறுதலைகள்.|
~சரி வேறு பஸ் பாரு. அதுவரை நாமினி ஏதுமினி கமலினி...?|
~குடிப்போமினி. வாருமினி. கூல்ட்ரிங்..?|
~கூல் ஸ்பொட்..கூல் அப்..?|
~கூல் டவுன்...டபுள் ஓக்கே.|
ஆக்கிலாவும்ää கமலினியும்ää குளிரகம் நுழைந்தனர். உள்ளே நீலச் சாரல் வண்ணத்தில் நுரை ததும்பிய குளுமையில் குளிர் விளம்பரங்கள். ஸ்ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸீறக் காத்திருக்கும் சிலிர்ப்புச் சோடாச் சிதறல்கள். ஐஸ்கிறீம்.. நைஸ் கிறீம். மெல்லிதாக நுனியதிரும் ஜெல்லிகள்.. அள்ளிச் சிலிர்த்துச் சிரிக்கும் வெள்ளைக் காரி.. அவளது ஜெல்லி மார்புகள்... காலி மேசை தேடி அமர்ந்தனர். வெய்ற்றர் வந்துற்றார். மேசை துடைத்தார். காதைக் குடைந்தார்.
~பலூடா ரெண்டு.| உள்ளதற்குள் ஓடர் கொடுத்தாள் கமலினி.
~பல்லூடாh ரெண்டூய்ய்ய்| உள்ளறைக்குள் ஓலம் கொடுத்தார் வெயிற்றர்.
~பிறகெப்படி கமலீ. உம்மட கிட்டு.? நலமா உன் காதல்?|
~அதையெப்படிச் சொல்ல.?| - கமலினி மௌனித்தாள்.
~சொல்லச் சம்மதமானால் கேட்கச் சித்தமாயிருக்pறேன்...|
~அவர் அதில் சேர்ந்துட்டார்.. |
~என்னது?|
~ஆமாம்ää காரைதீவுப் பொறுப்பாளர்.|
~அ..அப்படியானால் நீ...?|
~காரைதீவுக் கைதி. யேஸ்ää எ பிரில்லியன்ற் யங் பிஜென் இன் ற்று பிரிஸன்.| பாவமாய்ச் சிரித்தாள். திடீரென விழியோரம் நீர்மணி தெரிந்தது. நீர்மணிக்குள் கூரையில் சுழலும் நீல மின்விசிறி தெரிந்தது. இரகஸ்யமாயத் துடைத்தாள்.
~உன் அம்மாää அப்பா. அண்ணண்மார் குடும்பம்...?|
~அப்பா அப்பாலாகி ஒரு வருடம். அம்மா சும்மா. ஓரு அண்ணர் விழழுக்கிறைத்த வீணர். மறு அண்ணர் மாறாப் பொய்களில் விண்ணர். ரெண்டு குமர்கள். ஏதோ காலம் போகுது.. ஏனோ அகாலம் ஆகுது.. அது சரி உம்மட கதை..?|
~என் கதை உன் கதை போல் கதை அல்ல. வாப்பா மிதி வண்டி மிதித்து போகையில் மிதிவெடி மிதித்து குதியிழந்த கதை.. உம்மா அம்மாள் நோயில் கண்ணாள் பாயில்..~கபாயா|ää ~ஹிஜாப்|ää கூலிக்கு வாதாடித் தைக்கிறேன்.. கேலிக்கு ஆளாகி வதைகிறேன். எ பிரில்லியன்ற் மெக்னன்ட் லிவிங் இன் ற்று ஹாஃப் ஹெல்....|
~ப்ளடி ஹெல்.?|
~ப்ளடி ஷிட்..!|
~பலூடா தயார்|
~பருகுடா டியர்..|
வெளியே வந்தனர்.பஸ் நிலையம் ஒரே பரபரப்பாக இருந்தது. இருவரும் விரைந்து நடந்தனர். தனியார் தரிப்பை அடைந்தனர். கல்முனை பஸ் தயார் நிலை. உள்ளேறினர். எவருமிலர். வியந்தனர். சாரதி மட்டும் சரிந்திருந்தான். பயந்திருந்தான்.
~பஸ் போகாது... இறங்குங்க..இறங்குங்க..|
~ஏனுங்க..ஏனுங்க...?|
~இடையில கிரான் குளத்தில பிரச்சினையாம்...|
~என்னவாம்..?|
~நேரடி மோதல்..அதிரடி சாதல்..|
~அப்படியானால்...?|
~இன்று பஸ் இல்லை. போக முடியாது.|
அதிர்ந்து போய் நின்றனர் ஆக்கிலாவும் கமலினியும்... அப்போதுää சீறி வந்தன சில அதிரடி ஜீப்புகள்...
(பச்சை தொடரும்...)
No comments:
Post a Comment