Tuesday, July 7, 2015

எட்டாவது வெள்ளை.

எட்டாவது வெள்ளை.

வானவில்லில் இல்லை வெள்ளை. ஆயின்ää வெள்ளை இல்லாமல் வானவில்லே இல்லை..வெள்ளை தூய்மையானது. வெள்ளை வண்ணங்களின் அன்னை. உண்மையில்ää இன்மைதான் வெண்மையின் தன்மை. வெள்ளை மலர் அர்ச்சிப்புக்குரியது. வெள்ளை உள்ளம் கள்ளம் இல்லாதது. வெள்ளபை; பால் இனிமையானது. வெண்புறா சமாதானத்துக்குரியது. வெள்ளைப் பிரம்பு விழியிழந்தோருக்குரியது..


பூண்டு வகைகள் வெள்ளை நிறத்துக்குரியன... வெள்ளைப் பூண்டில் விள்ள முடியா மருத்துவம் உள்ளபடியால்ää சமையல் உள்ளே தனியிடம் உள்ளது. அள்ள அள்ளக் குறையாத ~ஆர்கினோஸல் பைப்ளவனொய்ட்ஸ்| உயிர்ச்சத்துள்ளதால்ää குருதி உறைதல் இல்லை. மாரடைப்பு இல்லை. வாயுத் தொல்லை இல்லவேயில்லை.


~வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு..வேடிக்கை காட்..|டியதை கவிதையாக்க்pனான் கண்ணதாஸன். ~மேகம் ஒண்ணு வானில் அலைகிறதே வெண்மையிலே. .வானத்துக்கு வெள்ளையடிக்கிறதா உண்மையிலே....?| என சந்தேகப்பட்டான் கவிவைரமுத்து...


டெலிகாவின் வெள்ளைக் கண்ணாடி வழியே மேல் திசையில் அகன்றுää வளைந்து. விரிந்து தெரிந்த வானவில்லைப் பார்த்தாள் ஆக்கிலா.. தமிழில் வானவில்.... ஆங்கிலத்தில் ரெயின்போ...விஞ்ஞானத்தில் விப்ஜிஓர்.......சிங்களத்தில் தேதுனு....அரபியில் கவ்ஸ_ன்....பிரஞ்சில் டெ பார்ஸோவ்........உலகின் எல்லா மொழிகளிலும் பேசப்படும் வானவில்..


~ஆக்கீ...அழகிய கூர் மூக்கீ..வானவில்லை நோக்கினாயா..?
~வானவில்லுடன் வாழ்கிறேன் கமலீ.....|
~யூனிவர்ஸிற்றியில் உம்மட புனை பெயர் வானவில் அல்லவா..?|
~உண்மை.|
~வானவில் பற்றி தமிழ்சங்கத்தில் ஒரு வசனவில் எழுதினீரே ஞாபகமிருக்கிறதா..?|
~கொஞ்சமிருக்கும்...|
~நெஞ்சிலிருக்கும் வரையும் சொல்லேன்.. ஊர் வரும் வரைக்கும்...நாவினிக்கும்..காதினிக்கும்..|


சீர் வேகத்தில் டெலிகா விரைந்தது.. ஏஸிக்குளிர் நாசிக்குள்ளேறியது.. ஆக்கிலாவின் தலைமுக்காடு சற்றுத் தளரää அவளது உச்சி வகிட்டு வெண்மை தெரிந்தது.. சுருண்டு தெரிந்தது கருங் கூந்தல்.. உருண்டை விழி மூடி தானெழுதிய கவிதையை நினைவு கூர்ந்தாள்... கமலினியும் சற்றுச் சாய்ந்து சொகுசாய் அமர்ந்தாள்.. வானவில்லின் பின்னணியில் கமலினி வானரசி போலிருந்தாள்.. ஆக்கிலாவைப் பார்த்தாள்... எப்பேர்ப்பட்ட புத்திசாலிப் பெண்ணிவள்....பின் அவளிடம் கேட்டாள்...


~ஆக்கீ..வானவில் என்றால் என்ன..?
~வானவில்....காலக்கிளி அணிந்த கழுத்து ஆரம்....| -முதலடி சொன்னாள் ஆக்கிலா...
~அடடா...அப்புறம்...?| வியந்து இரஸித்தாள் கமலினி.
~மாலைப் பெண்ணின் மசக்கை மருதாணி.|
~அட|
~வானவில் ää உடுக்கள் சுற்றும் குடை ராட்டினம்...வான ஐயரின் வர்ணப் பூநூல்....|
~ஐயோடா ஆக்கீ... இன்னும்;;;?|
~வானவில்ää ஆதி எறிந்த பாதி உடைந்த வர்ணப் பம்பரம்..|
~ஓஹ்...!|
~வானவில்...திசைக் கோணமளக்க பரிதி வைத்த பாகைமானி..|
~ஹை....|
~வானவில்ää கண்களுக்கு கதிர்கள் எழுதிய ஏழ்சீர் விருத்தம்|
~அம்மாடியோவ்...|
~வானவில்ää மழைக் காதலனின் மின்னஞ்சல் முகவரி...|
~ஹட.....|
~வானவில் குளிர்காலக் கணவன் அனுப்பிய வெளிநாட்டுக் கடிதம்...|
~ச்சூ...|
~அந்த
அதிசய வில்லைக் கொணர்ந்து
கைவளையாய் உனக்குத் தர
அண்ணார்ந்து பார்த்தேன்
காணவில்லை
வானவில்லை....|


~ஐயோடாஆக்கீ.அந்தநேரம்எங்கடபேக்கல்ற்றியில இ;ந்தக் கவிதைதான் எங்களின்ர தேசியகீதம்.|

~புகழாதே சிட:;டு... இதற்குப் பதில் சொல்...அத்தியாவசிய உத்தியோகம் பற்றியாகி விட்டது. ஏ எப்படியாகும் இனி உன் வாழ்வு...?|
~டிஸிஸன்ஸ் போல் இஸ் நொட் இன் மை கிரவுண்ட் ஆக்கீ.|
~வ்வாட் எ புவர் ரிப்ளை....ஷிட்...சீச்சி...|
~ஆக்கீ..நீ சொல்..உன் வாழ்வு...என்ன செய்யப் போகிறாய்..?|
~ஒரு வானவில் வாங்கப் போகிறேன் கமலினி..|
~ஓக்கே....வாங்கி...வீடு கட்டப் போகிறாயா....?|
~ஜீக்கே வங்கியில் ஈடு வைக்கப் போகிறேன்...|

கிக்கிலீரென இருவரும் சிரித்தனர்...வெகு காலங்களின் பின்னர் மனம் விட்:டுச் சிரித்த போது தாழையடிச் சந்தி திரும்பியது டெலிகா.. அதே நேரத்தில் பின்னால் வெகு வேகமாக ஒரு அதிரடி ஜீப் இவர்களை விரைந்து நெருங்கியது.. முந்திச் செல்ல அவசரப்பட்டது. நீ...ட்டொலி எழுப்பியது.. டெலிகா வேகம் குறைக்;க அதிரடிப்படை ஜீப் வலது பக்கமாக முடுகலெடுத்;தது.. முந்திச் சீறியது.. அந்தச் சாரதி இந்தச் சாரதிக்கு சிநேகிதமாய் தலையசைத்தது தெரிந்தது.. முந்திய அதிரடி ஜீப் நடு வீதிக்கு வந்து சர்வ சுதந்திரமாகப் பறந்தது....ஆனால்.............? இருபதடி தூரத்திலேயே அதன் விதி முடிந்தது மிகப் பயங்கரமாக...மிகப் பரிதாபமாக.....


நெஞ்சு திடுக்கிடும் பேரிடி ஒன்று கேட்டது...திடீரென விளiயாட்டுப் பொம்மை ஜீப்பு போல பத்தடி உயரே தூக்கி வீசப்பட்ட அதிரடி ஜீப் அதிவேகத்தில் பின் வந்த இவர்களின் டெலிகாவின் மீது மோதி விசிறியடித்துச் சிதறியது...சட்டென டெலிகா தன் கட்டுப்பாட்டை இழந்து சாய்வுக் கோணத்தில் அரைபட்டு எரிபொருள் தாங்கி உஷ்ணத்தில் வெடித்துச் சிதற........பேரிடிச் சதத்தத்துடன் இரு வாகனங்களும் தாளையடிச் சந்தியில் ஒரு கும்பமாய் ஜூவாலிட்டு செந்தீயாய் எழுந்தன...எரிந்து விழுந்தன.....விழுந்து சிதறின...சிதறியும் எரிந்தன...


இந்தப் பயங்கரக் கோரத்தையும்ää எரிந்த பயங்கரக் கோலத்தையும் மேலேää வர்ணிக்கப்பட்ட வானவில் மட்டு;ம்ää பார்த்துக் கொண்டிருந்தது தனிமையாக....அதன் வண்ணங்களும் கலைந்து கொண்டிருந்தன வெறும் வெள்ளைக் கனவுகளாக..................2000.05.01.




(வானத்தில் வானவில்கள் அழிந்தாலும் வானவில்லின் வர்ண ஞாபகங்கள் ஒருபோதும் அழிவதில்லை)

No comments:

Post a Comment